top of page
  • Writer's pictureஉறியடி செய்திகள்

தொகுதி மக்கள் மீதுஅரசியலுக்கு அப்பாற்பட்ட அக்கரை அன்பு! கே.என்.அருண் நேரு அமோக வெற்றி உறுதி! பேட்டி!

Updated: Apr 18

2024, நாடாளுமன்ற தேர்தலில், பெரம்பலூர் இண்டியா கூட்டணி தி.மு.கழக வேட்பாளர் கே.என்.அருண் நேரு பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவது உறுதி.!

மதம்மாறிய கிறிஸதவர்கள் நல அமைப்பு - குளித்தலையை அடுத்த கோட்ட மேடு புனித வனத்து சின்ப்பர் ஆலய கட்டுமான ஒருங்கிணைப்பாளர், மூத்த பத்திரிக்கையாளர் எம்.எஸ்.ராஜா தகவல்!

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி, இண்டியா கூட்டணி தி.மு.கழக வேட்பாளர் கே.என்.அருண் நேரு போட்டியிடுகின்றார்.

கே. என் அருண் நேருவுக்கு ஆதரவாக தி.மு.க. காங்கிரஸ், மதிமுக விசிக, உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்புகளப்பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.!

மணப்பாறை ஒன்றிய தி.மு.கழக முன்னால் செயலாளர், வழக்கறிஞர் மணப்பாறை,துரை - அழகிரி, முன்னால் உசிலம்பட்டி ஊராட்சித்தலைவர் முத்து, பழைய கோட்டை மணி உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், தோகமலை, பொருந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாக நேரில் சென்று 3 ஆண்டு தி.மு.கழகஅரசு சாதனைகளை எடுத்துக் கூறி திண்ணைப் பிரச்சாரம், தெரு முறை, டீ,க்கடை பிரச்சாரத்திலும் ஈடுபட்டு தீவிர தொடர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.!

குளித்தலையை அடுத்த கோட்ட மேடு புனித வனத்து சின்னப்பர் ஆலய வழிபாட்டாளர்கள் மற்றும் மதம்மாறிய கிறிஸ்தவர்கள் நல அமைப்பினர்கள் மகாதேவி ஆசிரியர் மணி, குளித்தலை அந்தோணிசாமி, மதம்மாறிய கிறிஸ்தவர்கள் (ஆர்.சி.) நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், உறியடி .காம் இணைய தள செய்தி நிருவனர் - ஆசிரியர் மூத்தப்பத்திரிக்கையாளர், சமூக பரம்பரை நாட்டாண்மை,(மணவை) தெலுங்கபட்டி எம்.எஸ். ராஜா. கோயம்பள்ளி பாக்கிய ராஜ்,வேங்காம்பட்டி குமார், ஏவூர் அருள், பேரூர் ஜோசப், விளக்காநத்தம், சேகர், பரம்பரை நாட்டாண்மை அன்பழகன், ஜான் கென்னடி, குறிச்சி அருள், செல்வராஜ், தந்திரிபட்டி செல்வராஜ், சின்னையன், அன்னமுத்து, கல்லணை நடராஜபுரம் குமார், திருச்சி விமல், பிரகாஷ் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர், 6. சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் கே.என், அருண் நேருவுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார்கள்.!


, அன்னமங்கலம்.எசனை, பெரம்பலூர் சர்க்கரை ஆலை பகுதியில் தொடங்கி லால்குடி, மாங்குடி, மணச்சநல்லூர், துறையூர், சிக்கத்தம்பூர்பாளையம், கோட்டப்பாளையம், முசிறி, விளாக் காநத்தம், பேரூர், ஏவூர், குலக்குடி, குளித்தலை, லால்குடி, மாயனூர், கள்ளப்பள்ளி. கருப்பத்தூர், வதியம் வேங்காம்பட்டி, கொசூர், தந்திரிப் பட்டி, தோகமலை, தெலுங்க பட்டி, வடசேரி, ஆர்.டி. மலை, பனையூர், குறிச்சி உள்ளிட்ட மேலும் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று, அமைப்பு - உறவு - வழிபாட்டு மக்களை நேரில் சந்தித்து தி.மு.கழக பெரம்பலூர் நாடாளுமன்றவேட்பாளர் கே.என்.அருண் நேருவுக்கு ஆதரவாக தீவிரமாக கடந்த ஒரு வாரமாக தொடர் வாக்குகள் சேகரித்தார்கள்.!

.


தொடர்ந்து மதம்மாறிய கிறிஸ்தவர்கள்நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், கோட்ட மேடு புனித வனத்துசின்னப்பர் ஆலய கட்டுமான ஒருங்கிணைப்பாளர், மூத்த பத்திரிக்கையாளர், உறியடி . காம், நிருவனர், ஆசிரியர் எம்.எஸ்.ராஜா செய்தியாளர்களிடம் பேசும்போது .....!


மக்களவைத் தொகுதி, பெரம்பலூர், துறையூர் (தனி), குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, குளித்தலை ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகளைக் கொண்டது.

ஆண் வாக்காளர்கள்: 7,01,400

பெண் வாக்காளர்கள்: 7,44,807

மூன்றாம் பாலினத்தவர்கள்: 145. உள்ளிட்டோர் நிறைந்த

இத்தொகுதி விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டது. பெரும்பாலான மக்கள் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள். இத்தொகுதியில் அதிகம் வாழ்ந்து வருகின்றார்கள்.!


ஆங்கிலேயேர்கள் இந்தியநாட்டை கைபற்றி ஆள தொடங்கிய காலத்தில், மலைகளையும், அது சார்ந்த குக்கிராமங்களில், விவசாயம்,மருத்துவம், வேட்டையாடுதல், தெய்வ வழிபாட்டுபணிகளோடு வாழ்ந்து வந்த அவர்களை மதம்மாற்றி, மலைசார்ந்த பிரதேசங்களிலிருந்து அப்பகுதி வாழ் பூர்வக்குடி மக்களை வெளியேற்றி அவர்கள் வாழ்ந்த பகுதி உள்ளிட்ட மலை பிரதேசங்களில் டீ, காப்பி தோட்டங்களை ஏற்படுத்தியதாக எங்கள் மூதாதையர் வழி வரலாற்று தகவல்கள் கூறுகிறது.!


அப்படி பட்ட பூர்வக்குடி மதம் மாறிய மக்களின் வம்ச வழியினர், (ஆர்.சி.)குளித்தலையை அடுத்த கோட்ட மேடு புனித வனத்து சின்னப்பர் ஆலய வழிபாட்டு எங்கள் உறவு மக்களாக தொகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 10 ஆயிரம் குடும்பத்தார்கள் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்,!


இதே போன்று புதுச்சேரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 38 , நாடாளுமன்ற தொகுதிகளிலும் கனிசமாக, தேர்தல் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் எண்ணிக்கையிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.!


எங்கள் சமூக மக்களிடம் கடந்த 10 , நாட்களாக, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தி.மு.கழக நாடாளுமன்ற வேட்பாளர் கே.என்.அருண் நேருவுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டது.!

பழங்குடியினர், சிறுபான்மையினர், சாதிய பலம், அரசியல் அதிகார பலமற்றவர்களாக வாழும் எங்கள் சமூக உறவு மக்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரம், அவர்கள் குடும்பம், பிள்ளைகளின் எதிர்காலம் மேம்பாட்டிற்க்காக பல்வேறு வகையிலும் ஆதரவு நிலைப்பாடு கொண்டிருந்தாலும், இன்னமும் தீவிர அரசின் கவனம் செலுத்த வேண்டிய கட்டாய சூழல் ஒரு புறம் இருந்தாலும் - !

முத்தமிழறிஞர் கலைஞர் காலம் தொட்டு சிறுபான்மை சாதி பலமற்ற, அரசியல் அதிகாரமற்ற எங்களை போன்ற மிக சிறுபான்மை மக்களின் நலனுக்காக, வாரியங்கள், அரசு துறையின் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல் வேறு வகையிலும் சமகால , சமந்தர்ம நடவடிக்கைகளை எடுத்து வருவது மிகுந்த பாராட்டுக்கும், வரவேற்புக்குறியது!


. இதன் அடிப்படையில் தான் குளித்தலை, கோட்ட மேடு புனித வனத்து சின்னப்பர் ஆலயம் அமையப்பட்ட பகுதியை உள்ளடக்கியுள்ள பெரம்பலூர் நாடாளுமன்ற தி.மு.கழக வேட்பாளர் கே.என்.அருண் நேருவுக்கு முழு ஆதரவாக தீவிரவாக்கு சேகரிப்புப்பணி எங்களால் முன்னெடுக்கப்பட்டது.!

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி மக்களிடம் அரசியலற்ற எதார்த்த அணுகுமுறை, கிராம மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தங்கள் பகுதிகளுக்கான வளர்ச்சி திட்டங்கள் பற்றி கூறும்போது, அதனை உணர்வுப்பூர்வமாக கேட்டு அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றி தருவேன் என்று மிகுந்த எளிமையான அவருடைய பேச்சு, அனைவரின் வரவேற்பையும், அசைக்க முடியாத நம்பிக்கையையும் பெற்று தந்துள்ளது.!


தி.மு.கழக கூட்டணி வேட்பாளர். கே.என்.அருண் நேரு, இந்திய ஒன்றியத்தின் தேர்தல் களத்திலே பெருபான்மை வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிப்பெறும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.!

இது நிச்சயம் 100 சதவிகிதம் உறுதியாகும்.!

இளையவர், இனியவர், எளிதில் எல்லோரிடமும் எதார்த்த, திறந்த மனதுடன், அரசியலுக்கு அப்பாற்பட்டு பழகுவது தொகுதியில் பெரும்பாலான மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பை - உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்றால் அது மிகையாகாது.!


இவ்வாறாக கூறினார்.


திருச்சி வின்ஸி

389 views0 comments
bottom of page