top of page
  • Writer's pictureஉறியடி செய்திகள்

உலகம் சுற்றுவதிலே கவனம்! இந்தியாவை பாதுகாக்க மோடி - பா.ஜ.வால் இனியும் முடியாது! கனிமொழி கருணாநிதி பேச்சு!


தமிழ்­நாட்­டில் ஏப்­ரல் 19ம் தேதி நடை­பெற உள்ள நாடா­ளு­மன்­றத் தேர்­த­லை­யொட்டி, தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.!


‘இந்­தியா’ கூட்­டணி தி.மு.கழக வேட்­பா­ளர், கவிஞர் கனி­மொழி கரு­ணா­நிதி விளாத்­தி­கு­ளம் சட்­ட­மன்­றத் தொகு­திக்கு உட்­பட்ட கருப்­பூர் பகு­தி­யில் பொது­மக்­க­ளி­டம் தேர்­தல் பரப்­புரை மேற்­கொண்டு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திற்கு வாக்­குச் சேக­ரித்­தார்.

அப்போது பொதுமக்களிடத்தில்,பிரச்­சா­ரத்­தில் தி.மு.கழக துணைச்செயலாளர் கவிஞர் கனி­மொழி கரு­ணா­நிதி பேசி­ய­தா­வது:–

பா.ஜ.க. தொடர்ந்து மக்­க­ளுக்கு இடையே ஜாதி மதம் பிரச்­சி­னை­கள் உரு­வாக்கி மக்கள் அனைவரும் சகோதரத்துடன் இணைந்து ஒற்றுமையாக வாழக் கூடாத சூழலை திட்டமிட்டு உரு­வாக்­கு­கி­றார்­கள். விவ­சா­யிகளுக்கு எதி­ரான, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான சட்­டங்­க­ளைக் கொண்டு வரு­கி­றார்­கள்,!


அதே போல தொழி­லா­ளர் மாணவர்களுக்கு எதி­ரான நீட் உள்ளிட்ட சட்­டங்­கள், CAA உள்ளிட்ட சட்­டங்­கள் கொண்டு வந்­தார்­கள்,!


அந்த சட்­டங்­களை பா.ஜக.வின் கைப்பாவையாக மக்களை பற்றி கவலைப்படாமல் , தங்களின் சுயநலத்துக்காக ஆத­ரித்­தது அ.தி.மு.க. இப்படி இந்­திய ஒன்றியத்தில் பல்வேறு மாநில வாரியாக வாழும் மக்­க­ளுக்கு இரண்டு கட்சிகளும் சேர்ந்து தொடர்ந்து துரோ­கங்­கள் செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்.!

மோடி­யின் ஆட்­சி­யில் தான் சீனா வடக்­கில் அரு­ணாச்­ச­லப் பிர­தே­சத்­தில் பல கிரா­மங்­க­ளில், சீனர்கள் ஆக்கிரமித்து தனி கிராமங்களை உரு­வாக்கி வீடு கட்டி 30 இடங்­க­ளுக்கு மேல் சீன மொழி­யில் பெயர் வைத்­தி­ருக்­கி­றார்­கள். அவர்­களை எதிர்த்து கேள்வி கேட்க பிர­த­ம­ருக்கு தைரி­யமோ! துணிவோ! இல்லை. இந்த நாட்­டி­னு­டைய எல்­லை­யைப் பாது­காக்க வேண்­டும், மக்­க­ளைப் பாது­காக்க வேண்­டும், நமது பிள்­ளை­க­ளைப் பாது­காக்க வேண்­டும் அதை நிச்­ச­ய­மாக பா.ஜ.க. ஆட்சியாலும், அவர்களும் இயலாமையாலும் உறுதியாக இனி செய்ய முடி­யாது. !


எனவே தான் இந்த தேர்­த­ல் பா.ஜ.க. வைப் பத­வி­யி­லி­ருந்து இறக்­கக் கூடிய தேர்­தலாக மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.!

மணிப்­பூ­ரில் பிரச்­சி­ னையை தங்களின் அரசியல் லாபத்திற்காக உரு­வாக்கி விட்டு கலவரங்களை ஏற்படுத்தி, அதை இன,மத, கலவரங்களாக கொளுந்து விட்டு இவர்கள் செய்த காரணத்தால், இன்று மக்­கள் யாரும் அங்கு வீடு­க­ளில் இல்லை, எல்­லா­ரும் பிள்­ளை­களை வைத்­துக்­கொண்டு முகா­மில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­ற­னர். என்­றா­வது வீட்­டுக்கு போக முடி­யுமா முடி­யாத என்ற நிலைமையில் இருக்­கி­றார்­கள்.!

ஆனால் மக்களை பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி ஒரு முறை கூட சென்று அந்த மக்­களை பார்த்­த­தில்லை,!

ஆனால்உல­கம் முழு­வ­தும் சுற்­று­கி­றார். அவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.!

உங்களில் ஒருவராக, இந்த தொகுதி மக்களின் தேவைகள். நல்லது, கெட்டது அறிந்து, நம்முடைய கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் அண்ணன் தளபதியார் நேரடி கவனத்து கொண்டு சென்று, பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் இப்பகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது கருப்­பூர் பகு­தி­யில் இருக்­கக்­கூ­டிய அரசு உயர்­நி­லைப் பள்­ளி­யில் ஒரு கோடி மதிப்­பீட்­டில் கூடு­தல் கட்­டி­டங்­கள் காட்­டும் பணி துவக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. உங்­க­ளோடு, உங்களுள் ஒருவராக, தொடர்ந்து பணி­யாற்­றக் கூடிய வாய்ப்பை எனக்கு வழங்க வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.!


இவ்­வாறு கவிஞர் கனி­மொழி கரு­ணா­நிதி பேசி­னார்.!


தூத்­துக்­குடி வடக்கு மாவட்­ட தி.மு. கழ­கச் செய­லா­ள­ர், சமூக நலன் – மக­ளிர் உரி­மைத்­துறை அமைச்­ச­ர் பெ.கீதா ஜீவன், விளாத்­தி­கு­ளம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மார்க்­கண்­டே­யன், தூத்­துக்­குடி மாந­க­ராட்சி மேயர் ஜெகன் பெரி­ய­சாமி, இந்­தியா கூட்­டணி சார்ந்த நிர்­வா­கி­கள் - சார்பு அணியினர் உள்­ளிட்ட பலர் கலந்­து­கொண்­ட­னர்.

26 views0 comments
bottom of page