top of page
  • Writer's pictureஉறியடி செய்திகள்

தேனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை! அலைகடலென பங்கேற்போம்! தங்க தமிழ்செல்வன் அழைப்பு!


தேனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை, தங்கத் தமிழ்ச்செல்வன் அறிக்கை!


தேனிவடக்கு மாவட்டச் செய­லா­ள­ர், இண்டியா கூட்டணி தி.மு.கழக நாடா­ளு­மன்றத் தொகுதி வேட்­பா­ள­ர் தங்க தமிழ்ச்­செல்­வன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.!

தி.மு.கழ­கத் தலை­வர், தமிழ்­நாட்டின் முதல்­ அமைச்சர், உலக நாடுகளுக்கும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில்திராவிட மாடல் ஆட்சி நாயகர், தளபதி மு.க.ஸ்டாலின் தமிழ்­நாட்­டில் உள்ள அனைத்து மாவட்­டங்­க­ளி­லும், ‘இந்­தியா’ கூட்­டணி வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து மாபெ­ரும் பிரச்­சா­ரப் பொதுக் கூட்­டம், பல்வேறு கட்ட பரப்புரை, நேரிடையாகமக்களோடு மக்களாகவும் வாக்­கு­கள் சேக­ரித்து வரு­கின்­றார்.!


இந்­நி­லை­யில் தேனி­யில், தேனி மற்­றும் திண்­டுக்­கல் நாடா­ளு­மன்ற ‘இந்­தியா’ கூட்­டணி வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து பிரச்­சா­ரம் செய்­கி­றார்.!

தமிழ்நாட்டுமக்களை ஏமாளியாக நினைத்துக் கொண்டு வெறும் வாயாலே வடை சுடுபவர்கள் வலம் வருகிற இந்த தேர்தல் காலகட்டத்தில் ---.!


தேனி நாடா­ளு­மன்ற ‘இந்­தியா’ கூட்­டணி வேட்­பா­ள­ரான என்னை ஆத­ரித்து உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தி­லும், திண்­டுக்­கல் நாடா­ளு­ மன்ற ‘இந்­தியா’ கூட்­ட­ணி ­யின் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி வேட்­பா­ளர் ஆர்.சச்­சி­தா­னந்­த்தை ஆத­ரித்து அரி­வாள் சுத்­தி­யல் நட்­சத்­தி­ரம் சின்­னத்­திற்­கும் மக்களிடத்தில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை நினைபடுத்தியும் - இண்டியா கூட்டணியின் . எதிர்கால மக்கள் நல திட்ட வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும் வாக்­கு­கள் சேக­ரித்து பரப்பரைகளை தொடரவுள்ளார்.!

முன்னதாக நாளை (10.04.2024) புதன்கிழமை, லட்­சு­மி­பு­ரம் மாவட்ட ஒருங்­கி­ணைந்த நீதி­மன்ற வளா­கத்­தின் அரு­கில் அமைந்­துள்ள, கலை­ஞர் திட­லில் மாலை 4.00 மணிக்கு மாநாடு போல் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள பிரம்­மாண்­ட­மான பிரச்­சார பொதுக்­கூட்­டத்­தில் பங்­கேற்று எழுச்­சி­யுரை ஆற்ற உள்­ளார்.

எனவே இந்த மாபெ­ரும் தேர்­தல் பிரச்­சா­ரப் பொதுக்­கூட்­டத்­தில் சுமார் ஒரு இலட்­சத்­திற்­கும் மேற்பட்ட பொதுமக்கள் . தி.மு.கழ­கத்­தி­னர்கள், கூட்­டணி கட்­சி­யி­னர்கள் பங்­கேற்­கும் வகை­யில் ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளது.!


எனவே வரலாற்று முக்கியத்துவசி­றப்பு மிக்க இந் நிகழ்ச்­சி­யில் இரு நாடா­ளு­மன்­றத் தொகு­தி­களை சேர்ந்த மாநில, மாவட்­டக் கழக நிர்­வா­கி­கள், தலை­மைச் செயற்­குழு,

பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள், மாந­கர, ஒன்­றிய, நகர, பேரூர், பகுதி கழக செய­லா­ளர்­கள், நிர்­வா­கி­கள், வார்டு, கிளைக் கழக செய­லா­ளர்­கள், நிர்­வா­கி­கள், கழக அனைத்து சார்பு அணி அமைப்­பா­ளர்­கள், துணை அமைப்­பா­ளர்­கள், உள்­ளாட்சி பிர­தி­நி­திகள், கழக முன்­னோ­டி­கள் மற்­றும் கூட்­டணி கட்சி நிர்­வா­கிகள், பொது­மக்­கள் வாக்­கா­ளர்­கள் என பெரும் திர­ளா­னோர் அலை­க­டல் என திரண்டு வந்து பங்­கேற்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கிறேன்.!


இவ்­வாறு தங்க தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில். கூறி­யுள்­ளார்

24 views0 comments
bottom of page