top of page
Search

நடிகர் விஜய் கட்சி மாநாடு ! பாதுகாப்பு - அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 33 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி !

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Sep 9, 2024
  • 3 min read

தோகமலை.

ச.. ராஜா மரிய.திரவியம் .....


நடிகர் விஜய் தொடங்கியுள்ள த.வெ.க. மாநில மாநாட்டுக்கு பாதுகாப்பு - அடிப்படை வசதிகள், உள்ளிட்ட 33 நிபந்தனைகளுடன் விக்கிரவாண்டி மாவட்ட காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது !

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியிலுள்ள வி.சாலையில் செப்டம்பர் 23-ம் தேதி நடத்துவதற்கு அனுமதி கோரி விழுப்புரம் மாவட எஸ்.பி அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை ஆய்வு செய்த காவல் துறையினர், ‘மாநாடு நடத்துவதற்கு நடைமுறை வழிகாட்டுதல் எதுவும் குறிப்பிடவில்லை’ என்பதால் 21 கேள்விகள் கேட்டு கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பினர்.!


த.வெ.கட்சியின் சார்பில் 21 கேள்விகளுக்கான பதில் விளக்கத்தினை கடந்த செப்டம்பர் 6-ம் தேதி கொடுத்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து காவல்துறை அனுமதி தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்திக்க தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. !


காவல்துறையின் அழைப்பின் பேரில், காவல் நிலையம் சென்ற த.வெ.க பொருப்பாளர்கள் சீலிடப்பட்ட மாநாட்டிற்கான அனுமதி கடிதத்தை டி.எஸ்.பி சுரேஷிடமிருந்து பெற்றுக் கொண்டனர். அக்கடிதத்தில், சில நிபந்தனைகளுடன் மாநாட்டிற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.

விஜய்யின் த.வெ.க முதல் அரசியல் மாநாட்டிற்கு காவல்துறை 33 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் மேடை, மாநாட்டு இடம், பார்க்கிங் வசதி ஆகியவைகளின் வரைபடங்களை கொடுக்க வேண்டும்.!


அனுமதி கேட்டு கொடுத்த மனுவில் 1.50 லட்சம் பேர் வருவார்கள் என குறிப்பிட்டுவிட்டு தற்போது கேட்கப்பட்ட 21 கேள்விகளில் 50 ஆயிரம் பேர் வருவார்கள் என்று பதில் சொல்லி இருக்குறீர்கள். இதற்கு என்ன காரணம்? 50 ஆயிரம் பேர் அளவுக்குதான் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும். ஆகவே அதற்கான ஏற்பாடுகளை செய்யவும்.!


அதேநேரம், மாநாட்டிற்கு 50 ஆயிரம் பேர் வருவார்கள் என்று கூறியுள்ளீர்கள். ஆனால், நீங்கள் கொடுக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் பார்த்தால், 20 ஆயிரம் பேர்தான் வர முடியும். ஏன் இப்படி கொடுத்துள்ளீர்கள்?

மாநாடு இரண்டு மணிக்கு நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள நிலையில், மாநாட்டிற்கு வருபவர்களை 1:30 மணிக்குள்ளேயே மாநாட்டு பந்தலுக்கு உள்ளே வந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் யார் தலைமையில் எந்தெந்த ஊரிலிருந்து எவ்வளவு பேர் வருகிறார்கள் என்ற விவரங்களை கொடுக்க வேண்டும்.!


மாநாட்டிற்குச் செல்லும் வழிகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆகவே அங்கு சமமான சாலையை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

அனைவருக்கும் குடிநீர், உணவு ஏற்பாடு செய்ய வேண்டும்.!


மாநாட்டு பரப்பளவு 85 ஏக்கர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மாநாட்டு மேடை, மற்றும் மாநாட்டிற்கு வருபவர்கள் அமரும் இடம் தவிர மற்ற இடங்களை பார்க்கிங் வசதிக்கு பயன்படுத்த வேண்டும்.!


பார்க்கிங் இடத்திற்கும், மேடை மாநாட்டு இடத்திற்கும் இடையே தடுப்பு அமைக்க வேண்டும். கர்ப்பிணிகள், முதியோர்களுக்கு தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். விஜய் வந்து செல்லக்கூடிய அந்த வழியில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.!

மாநாட்டிற்கு வருபவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

மாநாடு நடைபெறும் இடம் அருகே ரயில், ரோடு மற்றும் 6 கிணறுகள் உள்ளதால் அந்த பகுதியில் மக்கள் செல்லாதவாறு தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும்

தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய பகுதியில் நடைபெறுவதால் அவசரத்தில் பலர் இந்த சாலையை கடந்து செல்வார்கள். ஆகவே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மாநாடு நடத்த வேண்டும்.!


பார்க்கிங் இடத்திலிருந்து மக்கள் மாநாட்டு இடத்திற்கு வருகையில் பாதுகாப்பிற்கு, தன்னார்வலரை பயன்படுத்தவும்.

கொடி, அலங்கார வளைவு, பேனர் போன்றவை கட்டுவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்த அளவிற்கு அதனை தவிர்க்க வேண்டும்.!


மாநாட்டிற்கு வருபவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மழை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் மாநாடு இடத்தில் முன்னேற்றப்பாட்டிற்கு நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருக்க வேண்டும். பொதுப்பணித் துறை பொறியாளரிடம் மேடையின் உறுதித்தன்மையை பெற வேண்டும்.

மின் பொறியாளர்களிடம் பாதுகாப்புச் சான்றிதழ் பெற வேண்டும், கூம்பு ஒலிபெருக்கி, வானவேடிக்கை கூடாது.!

மாநாட்டிற்கு வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் விஜய்யுடன் வருபவர்களுக்கு யார் யாருக்கு பாஸ் வழங்கப்படுகிறது? அந்த விவரங்களை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.!


மக்கள் கூட்டம் வருவதால் ஆங்காங்கே அவர்கள் எளிதில் காணும் வகையில் எல்இடி அமைக்க வேண்டும். மாநாட்டு மேடை வரும் வழி மாநாட்டு திடல் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கவும் வேண்டும்.

மாநாட்டில் தீயணைப்பு, மருத்துவம் உள்ளிட்ட வாகனங்கள் அங்கு அனுமதி பெற்று நிறுத்தப்பட வேண்டும்.!


தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மாநாட்டில் இருந்து வருபவர்கள் தேசிய நெடுஞ்சாலைக்கு வராத வகையில் தடுப்புகளை அமைக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட 33 நிபந்தனைகளுடன் த.வெ.க மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.!

நடிகர் விஜய் நேற்று அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து இருந்தோம். அதைச் சட்டப்பூர்வமாக பரிசீலித்தது நமது நாட்டின் தேர்தல் ஆணையம்.


இதனை தொடர்ந்து நடிகர் விஜய் ....

தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில் பதிவு செய்யப்பட்டக் கட்சியாக பங்குபெற தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதை அனைவரோடும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. இந்தச் சூழலில் நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநாடுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள்” என்று விஜய் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page