தஞ்சை: தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்! அமைச்சர்கள் கே.என்.நேரு - கோவி.வி.செழியன் சூறாவளி சுற்றுப்பயணம்.!
- உறியடி செய்திகள்
- 6 days ago
- 2 min read

மணவை எம்.எஸ்.ராஜா@
ச.ராஜா மரியதிரவியம்.
தோகமலை ......
தஞ்சை மாவட்ட தி.மு.கழக நிர்வாகிகள் 2026 - தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் கே.என்.நேரு - கோ.வி.செழியன் சூறாவளி சுற்றுப்பயணம்.!

தி.மு.கழக தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர். மு.க.ஸ்டாலின், அறிவுறுத்தல், வழிகாட்டு ஆலோசனைகளின் படி ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் தி.மு.கழக நிர்வாகிகளுடன் 2026 - சட்ட தேர்தல் ஆலோசனைக் கூட்டம், தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் நடைபெற்றது. கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக தி..மு.கழக முதன்மைச்செயலாளர், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட பொருப்பு -தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர்.கோ.வி.செழியன் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகளுடன் தனித்தனியே சந்தித்து உரையாடி கருத்துக்களையும் கேட்டறிந்தனர்கள்!


முன்னதாக தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.கழக நிர்வாகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என்.நேரு, கூட்டத்தில் பேசும்போது மக்களாட்சி நாயகர் கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதியாரின் தலைமையிலான கழக ஆட்சி மீண்டும் அமையவும், அதற்காக கட்சி நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.!

இதனை தொடர்ந்து, தி.மு. கழக நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து தங்கள் பகுதிகளில் மேற்கொண்டு வரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும், 2026 - தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைகளையும், விரிவாக கேட்டறிந்தார்.!.

கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினர் . கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் . சாக்கோட்டை அன்பழகன், மாநகர செயலாளர் சு.ப.தமிழழகன், மற்றும், கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், மாநகர - மாவட்ட - பகுதி - நகர - பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டார்கள்..
மேலும் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், தி.மு.கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டங்களிலும் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக பட்டுக்கோட்டையில் நடைபெற்ற தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் . கோ.வி. செழியன் இணைந்து கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும், வழங்கி அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.!
அப்போது பேசிய அமைச்சர் கே.என்.நேரு,
குறிப்பாக வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தேர்தல் வியூகம் அமைத்து செயல்படுவது - கழக அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்வது - தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க தி.மு.கழக தலைவர் தளபதியார் மேற்கொண்டு வரும், தமிழ்நாட்டின் உரிமைகளையும், அனைத்துத்தரப்பு மக்களின் வாழ்வாதாரம், ஆகியவற்றை களையும் பல்வேறு இன்னல்கள் - இடையூறுகள், தடைகளுக்கு மத்தியில் பாதுகாக்க எடுத்து வரும் சட்டப் போராட்டங்களை பொதுமக்களிடத்தில் விளக்கிக் கூறுவது - தி.மு.கழக மக்களுக்கான ஆட்சியில் இதுவரை நடைமுறைபடுத்தப்பட்டுள்ள திட்டங்கள் உள்ளிட்டவைகளை மக்களிடத்தில் வீடுகள் தோறும் திண்ணைப் பிரச்சாரமாக எடுத்து செல்வது குறித்தும் விளக்கமாக எடுத்துக் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் . பழனிவேல், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் . என்.அசோக்குமார், தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் . துரை. சந்திரசேகரன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் . சாக்கோட்டை க.அன்பழகன், நகர செயலாளர் செந்தில் குமார், ஆகியோருடன் செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், மாநகர - மாவட்ட - பகுதி - நகர - பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.!
இதனை தொடர்ந்து,தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் .கோ.வி.செழியனுளுடன் இணைந்து கலந்து கொண்ட அமைச்சர் கே.என்.நேரு,.

கூட்டத்தில் கட்சியினர் மத்தியில் பேசும்போது வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் குறித்தும், தி.மு.கழக திராவிட மாடல் அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் கொண்டு செல்வது குறித்தும் விரிவாத பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.!
. தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு நம் கழகத் தலைவர், தமிழ்நாட்டின் - முதல் அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் முத்தமிழறிஞர் தலைவர் கலை ஞரின் வழியில், ஆட்சியில் அமர வைத்து, தி.மு.கழகம் ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க அயராது பாடுபடுவோம் இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன், தி.மு.கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் .எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர் .டி.கே.ஜி.நீலமேகம், மேயர் .சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் தொகுதி பார்வையாளர்கள், மாநகர - மாவட்ட - பகுதி - நகர - பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணியினர் மற்றும் மூத்த முன்னோடிகள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.
Comentários