அமைச்சர் கே.என். நேரு தொடர் சுற்றுபயணம்.! திருவாரூர் - நாகை, மாவட்ட கட்சி நிர்வாகளுடன் தனித்தனியாக ஆலோசனை!
- உறியடி செய்திகள்
- 5 days ago
- 2 min read

மணவை எம்.எஸ்.ராஜா@
ச. ராஜா மரியதிரவியம் ........
திருவாரூர் - நாகை, மாவட்டங்களில் அமைச்சர் கே.என்.நேரு தொடர் சுற்றுபயணம் கட்சி நிர்வாகிகளுடன் தனித்தனியாக சந்தித்து ஆலோசனைகள் மேற்கொண்டார்.!
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.கழக தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுருத்தல் வழிகாட்டுதலின் படி தி.மு.கழக முதன்மைச்செயலாளர் - தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அசைச்சர் கே.என் நேரு ஒவ்வொரு மாவட்டங்களிலும் நேரில் சென்று தி.மு. கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்..

அந்த வகையில் தஞ்சை தெற்கு - மத்திய - வடக்கு மாவட்டங்களை தொடர்ந்து இன்று மே.15. வியாழக்கிழமை திருவாரூர் மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் . டி.ஆர்.பி. ராஜாவுடன் இணைந்து இன்று கலந்து கொண்டார். !
கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்சிப் பணிகள் குறித்தும் - தி.மு.கழக அரசினர் சாதனை மக்கள் நல திட்டங்களால் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள தாக்கம் - தேர்தல் வியூகம் - திண்ணைப் பிரச்சாரம் உள்ளிட்டவை குறித்து ஒவ்வொரு நிர்வாகிகளிடமும் தனி தனியாக விரிவாக கேட்டறிந்தார்.. !

மேலும், தி.மு. கழக அரசுக்கு எதிரான பொய் - அவதூறுகளை முறியடித்து, தமிழர்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து வரும் திராவிட மாடல் அரசு மீண்டும் அமைய ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.!
கூட்டத்தில் அவைத்தலைவர் க.தன்ராஜ், மாவட்ட கழக செயலாளர் பூண்டி. கே. கலைவாணன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் - மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பு செயலாளர் உ. மதிவாணன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் - தாட்கோ தலைவர் நா. இளையராஜா உள்ளிட்ட மாநில - மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் கழக, சார்பு அணிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.!

தொடர்ந்து நாகை மாவட்டத்தில் உள்ள தளபதி அறிவாலயத்தில் நடைபெற்ற நாகை மாவட்ட தி.மு.கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் . அன்பில் மகேஷ் பொய்யாமொழி டன் இணைந்து இன்று கலந்து கொண்ட அமைச்சர் கே.என் நேரு.
கூட்டத்தில், கலந்து கொண்ட நிர்வாகிகள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்ட நிலையில், கழக நிர்வாகிகளின் செயல்பாடு - தொகுதி மேற்பார்வையாளர்களின் ஈடுபாடு உள்ளிட்டவை குறித்து தனித்தனியாகவும் கேட்டறிந்தார்.. !

மேலும், தி.மு.கழக அரசு மக்களின் பேராதரவோடு மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் நாகை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் வெல்வதுடன், இந்த மாவட்டம் தி.மு.கழகத்தின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வண்ணம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி கட்சியினர் மத்தியில் பேசினார்.!.
கூட்டத்தில் நாகை மாவட்ட கழகச் செயலாளர் . கௌதமன் சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள், கழகத்தின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், மாநில - மாவட்ட - மாநகர - ஒன்றிய - நகர - பேரூர் கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.!
Comments