அமெரிக்க முதலீடு தமிழ்நாட்டில் ! முதல்வருக்கு நேரில் வாழ்த்து ! கள்ளக்குறிச்சி மாநாட்டில் தி.மு.க. பங்கேற்பு ! தொல்.திருமா தகவல் !
- உறியடி செய்திகள்
- Sep 16, 2024
- 1 min read

தோகமலை.
ச. ராஜா மரியதிரவியம் ......
அமெரிக்க பயணத்தில், தமிழ்நாட்டுக்கு அதிக முதலீடு ஈர்த்து வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விசிக, தலைவர் திருமா, கட்சியினர் நேரில் வாழ்த்து. !
கள்ளக்குறிச்சி விசிக, மது ஒழிப்பு மாநாட்டில் தி.மு.க. பங்கேற்பதாகவும் தகவல். !

தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் .மு.க.ஸ்டாலினை இன்று (16.09.2024) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், மக்களவை உறுப்பினர் .தொல்.திருமாவளவன் சந்தித்து, அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்தமைக்காக வாழ்த்து தெரிவித்தார்.

விசிக சார்பில் நடைபெற உள்ள மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கும், என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது விசிகவின் மதுஒழிப்பு மாநாட்டிற்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தார். !

பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய திருமாவளவன், ’அமெரிக்கா சென்று முதலீடுகளை ஈர்த்து வந்த முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தோம். முதல்-அமைச்சரின் அமெரிக்கா பயணத்தில் 19 ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது இது வரலாற்று சிறப்பு மிக்க பயணம்.

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வீடியோ குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேசவில்லை. திமுக - விசிக கூட்டணி உறவில் எந்த விரிசலும் இல்லை; நெருடலும் இல்லை. நாங்கள் கூட்டணியில் உறுதியாகவே இருக்கிறோம். தேர்தலுக்கும் இந்த சந்திப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆட்சியில் பங்கு குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். மதுவிலக்கு மாநாட்டை தேர்தல் அரசியலோடு இணைத்து, பிணைத்து பார்க்க வேண்டாம்.

. அக்டோபர் 2-ம் தேதி விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன் வைக்க உள்ளோம். விசிக சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெறவுள்ள மதுவிலக்கு மாநாட்டில் திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்பார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்நிகழ்வில் தி.மு.கழக பொதுச் செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் .துரைமுருகன், முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு . ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், விசிக எம்.பி.ரவிக்குமார்,
, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிள் உடனிருந்தார்கள்.
Comments