மகா விஷ்ணு மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில், 5 பிரிவுகளில் வழக்கு ! 14 நாட்கள் நீதிமன்ற காவல் !
- உறியடி செய்திகள்
- Sep 7, 2024
- 1 min read

ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு கைது, 5 பிரிவுகளில் வழக்கு பதிவு, 14 நாட்களுக்கு நீதிமன்ற காவல், சொற்பொழிவாளர் சொன்னபடி ! முப்பிறவி பலன்படியே எல்லாமே நடந்தது. இணையத்தில் வைரல்
சென்னையில் இரண்டு அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று (07.09.2024) சென்னை திரும்பினார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் பேரில் மகாவிஷ்ணு விமான நிலையத்திலேயே வைத்து சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) - 2023 சட்டத்தின் படி192, 196(1)(a), 352, 353(2) ஆகிய 4 பிரிவிலும், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் - 2016 இன் கீழ் 92(a) என்ற பிரிவிலும் என மொத்தம் 5 பிரிவுகளில் மகாவிஷ்ணு மீது சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு மகாவிஷ்ணு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து செப்டம்பர் 20ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.!
ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு கைது, 5 பிரிவுகளில் வழக்கு பதிவு, 14 நாட்களுக்கு நீதிமன்ற காவல், சொற்பொழிவாளர் சொன்னபடி ! முப்பிறவி பலன்படியே எல்லாமே நடந்தது. என்கிற கருத்துடன் இணையத்தில் வைரலாகியும் வருகிறது.
Comments