top of page
Search

கோவை - மருத்துவமனைகளுக்கு டயாலிசிஸ் கருவிகள்!மார்ட்டின் கல்விக்குழுமத் தலைவர் டாக்டர் லீமா ரோஸ்மார்ட்டின் வழங்கினார்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • 6 days ago
  • 1 min read

ச. ராஜா மரியதிரவியம்.

தோகமலை - கரூர்,


கோவையில் இரண்டு. மருத்துவமனைகளுக்கு டயாலிசிஸ் கருவிகள், சமூக ஆர்வலர் டாக்டர் லீமா ரோஸ்மார்ட்டின் வழங்கினார்.!


கோவை மார்ட்டின் கல்விக்குழுமங்கள்,மார்ட்டின் அறக்கட்டளை, (மாவட்ட),டிஸ்ரிக் ரோட்டரி சங்கத்தலைவர் சமூக ஆர்வலர் டாக்டர் லீமா ரோஸ் கோயம்புத்தூர் - கவண்டம்பாளையம் ஆகிய பகுதிகளிலுள்ள இரண்டு மருத்துவமனைகளுக் மூன்று டயாலி சிஸ் கருவிகள் - உபகரங்களை வழங்கி அவற்றின் செயல் பணி களையும் தொடங்கி வைத்தார்.!

முன்னதாக கோவை ரேஸ்கோர்ஸ் அருகிலுள்ள கே.ஜி , மருத்துவமனைக்கு ஒரு (தர்மா) டயாலிசிஸ் மருத்துவ கருவி - உபகரங்களை அதன் தலைவர் டாக்டர் பக்தவசலம் பெற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து கவுண்டம்பாளையம் கல்பனா மருத்துவமனை தலைவர் டாக்டர் பாலச்சந்தர் இரண்டு (தர்மா) டயாலிசிஸ் மருத்துவ உபகரங்களையும் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக இங்கு டயாலிசிஸ் மருத்துவ கருவி - உபகரங்களை வழங்கி அதன் செயல் மக்கள் பணியை தொடங்கி வைக்க வருகை தந்த சமூக ஆர்வலர் டாக்டர் லீமா ரோஸ்மார்ட்டினுக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் - பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தார்கள்.

விழாவில் ஶ்ரீ லங்கா கேன்டி ஹில் கேப்டல், கவிதா கோபாலகிருஷ்ணன், குணவர்த்தனா உட்பட ரோட்டரி சங்கத்தினர் - முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page