கோவை : ஜிஎஸ்டி சர்ச்சை ! பாஜக, நிலைப்பாடுதான் என்ன?நியாயபடுத்தும் வானதி ! மன்னிப்பு கோறும் அண்ணாமலை ! எச்.ராஜா என்னத்த சொல்வாரோ?
- உறியடி செய்திகள்
- Sep 13, 2024
- 1 min read

தோகமலை.
ச ராஜா மரியதிரவியம் .......
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கோரிய வீடியோவை வெளியிட்டதற்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டார்.

கோவையில் நடந்த கூட்டத்தில், ஜி.எஸ்.டி., வரி வித்தியாசம் தொடர்பாக நகைச்சுவை தொனியில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் புகார் தெரிவித்தார். அது வைரல் ஆன நிலையில், மன்னிப்பு கேட்டார் என்கிற தகவலும் வைரலானது.!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோவை அன்னப்பூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 'வணிகர்களுக்கு மிஞ்சியது அவமானம் மட்டுமே' என காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி தி.மு. கழக துணைப்பொதுச் செயலாளர், மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தமிழகம் உள்ளிட்ட அனைத்து தரப்பு எதிர்கட்சியினரும் - கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். !
இதனால் அரசியல் ரீதியான பாதிப்பு பாஜகஏற்பட்டு விட்டதாக வே அரசியல் களத்தில் பரப்பரப்புடன் பேசப்பட்டும் வருகின்றது. !

இந்நிலையில் லண்டனில் இருக்கும் பா.ஜ., தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.!
அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'நிதியமைச்சர் நிர்மலா உடன் அன்னபூர்ணா நிறுவனர் பேசிய வீடியோ வெளியானதற்கு மன்னிப்பு கோருகிறேன். வீடியோ வெளியிட்டதற்காக ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனிடம் வருத்தமும் தெரிவித்தேன்.!

அன்னபூர்ணா சீனிவாசன் தமிழகத்தின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை, இத்துடன் முடித்து வைக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.!
திடீரென வாண்டடாக வண்டியில் ஏறிய கதையாக அண்ணாமலை, கோவையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. தொடர்பாக நடந்த கூட்ட நிகழ்வு குறித்து, உடனிருந்த வானதியே நடந்தவற்றை நியாயபடுத்தி பேசி வரும் நிலையில் அண்ணாமலை லண்டனிலிருந்து மன்னிப்பு கோரியிருப்பது, பாஜக வட்டாரத்திலே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதுடன், சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருகின்றது.


ஆக நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் என்பதைப் போல லண்டனிலிருந்து அண்ணாமலை வெளியிட்ட இந்த மன்னிப்பு கோறும் அறிவிப்பை தொடர்ந்து, தமிழக பாஜக, ஒருங்கிணைப்புக்குழு பொருப்பாளர் எச்.ராஜா அடுத்த கட்ட நகர்வாக என்னத்த சொல்லுவா ரோ என்கிற கேள்விகளுக்கும் பஞ்சமில்லை.!
பொருத்திருந்து தான் பார்ப்போம் ! என்னதான் நடக்கும் ....!
Comentarios