ஊடகங்கள் திரித்து விட்ட கூட்டணி பேச்சு சர்ச்சை! முற்றுப்புள்ளி வைத்தார் அமைச்சர் கே.என். நேரு !
- உறியடி செய்திகள்
- Sep 5, 2024
- 2 min read

கூட்டணி குறித்த சர்ச்சையை சில ஊடகங்கள் உள்நோக்கத்துடன் திரித்து அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக்கியதற்கு முற்றுப்புள்ளி வைத்து விளக்கமளித்தார் அமைச்சர் கே.என். நேரு...

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ.உ.சி திருவுருவச் சிலைக்கு அவரது 153-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.கழக முதன்மைச்செயலாளர். தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.!
இதனையடுத்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்து கூறியதாவது.

தி.மு.கழக கூட்டணி என்பது இந்திய அரசியலில் அரசியல் கட்சி கூட்டணிகளுக்கு முன்மாதிரியானது என்பது அனைவரும் நன்கு அறிவார்கள்.!
தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தலைமையில் எங்கள் கூட்டணி தமிழ்நாட்டின் எதிர்காலம் மக்களின் எதர்காலம், ஆகியவற்றில் மிகச் சரியான கூட்டணியாக செயல்பட்டு வருகிறது.!

எங்கள் கூட்டணி குறித்து நான் லால்குடியில் பேசியதை, தவறாக புரிந்து கொண்டு, சில ஊடகங்கள் திரித்து வெளியிட்டுள்ளனர்.!
கழகத்தலைவர் தமிழக முதல்வர் தளபதியார் என்றைக்கும் தற்போதைய கூட்டணியை, விட்டுக்கொடுக்க மாட்டார்.!

கழகம் ஆட்சி பொருப்பேற்றதிலிருந்தும், தேர்தலை சந்தித்த போதும், கொள்கை ரீதியான அரசு முடிவுகளையும் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இணக்கமுடன் தான் எடுத்து வருகின்றார் என்பது நாட்டு மக்கள் நன்கறிந்த ஒன்றாகும்.
38 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆட்சியமைத்ததை சட்டமன்றத்தில் ஜெயலலிதா பெருமையாக பேசினார்.!

அதைப்போல, எங்களை அரசியலில் ஆளாக்கிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் இல்லாத சூழலிலும், அவருடைய அரவணைப்பு வழிகாட்டல்களில் குறை சொல்ல இயலாத வகையில் எங்கள் தலைவர் தளபதியாரின் தலைமையில் கழகம் ஆட்சியை பிடித்ததைப் போல தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வு, இனம் மொழி, காக்கும் வகையில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கை கோர்த்து வரும் தேர்தலிலும், வரலாறு போற்றும் மிகப்பெரிய வெற்றியை பெற்று, மீண்டும் ஆட்சியை தொடர எந்த நிலை வந்தாலும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்றுதான் பேசினேன்.!

அதை சிலர்மாற்றி செய்தியாக போட்டு விட்டார்கள். கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களோடு எப்போதுமே சுமூகமாகத்தான் பழகுகின்றனர்.! எங்களின் கழக த்தலைவர் தளபதியார் வழியில் நாங்களும் சகோதரத்துவ உறவுடன் அப்படியேத்தான் பழகி வருகின்றோம்.!
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.!
மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன், பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் கே.என். அருண் நேரு, ஹரிஹரூன், டாக்டர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்..!



தொடர்ந்து
திருச்சி , உறையூர், மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய, அமைச்சர் கே.என்.நேரு . ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்தும். வாழ்த்தி பேசினார்
. மாவட்ட ஆட்சித் தலைவர் .மா.பிரதீப் குமார் மேயர் .மு.அன்பழகன் , மாநகராட்சி ஆணையாளர் வே.சரவணன் ஆகியோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
Comments