தி.மு.கழக முப்பெரும்விழா ! பிரமாண்டத்தில்சென்னை ஒய் எம் சி ஏ மைதானம் ! முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு !
- உறியடி செய்திகள்
- Sep 15, 2024
- 2 min read

தோகமலை.
ச ராஜா மரியதிரவியம் .......
தி.மு.கழக முப்பெரும் விழா கோலாகல ஏற்பாடுகள் தீவிரம், முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

செப்.15ம் தேதி அண்ணா பிறந்த தினம், 17ம் தேதி பெரியார் பிறந்த தினம், மற்றும் தி.மு.கழகம். தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக செப்.17ம் தேதி ஆண்டுதோறும் திமுக சார்பில்,கொண்டாடப்பட்டு வருகிறது.!

இந்நிலையில், தி.மு.கழகத்தின் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந் துள்ளது. எனவே, வரும் செப்.17-ம் தேதி தி.மு.கழக பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. தென் சென்னை மாவட்ட தி.மு.கழகம் சார்பில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 17ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.!

முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு விருதுகளை, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விருதாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.


குறிப்பாக பெரியார் விருது - அண்ணா - கலைஞர் பாவேந்தர் , பேராசிரியர் ஆகியோர் பெயரிலான விருதுகள் வழங்கப்படுகிறது. மேலும் இந்தாண்டு புதிதாக மு.க.ஸ்டாலின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

16 பேருக்கு பண முடிப்பு: இது தவிர, கட்சியில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் கவுரவிக்கப் படுகின்றனர். அந்த வகையில், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கட்சி நிர்வாகிகளுக்கு தலா ரூ.1 லட்சம் பண முடிப்பை தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். இந்த பண முடிப்பு, மண்டல அளவில் 4 பேர் வீதம் 16 பேருக்கு வழங்கப்படுகிறது.


விழாவில், துணை பொதுச்செயலாளர்கள் அமைச்சர்கள் க.பொன்முடி, ஐ.பெரியசாமி, முன்னால் ஒன்றிய அமைச்சர், நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, நாடாளு இரு அவைகளின் தி.மு.கழகக்குழுத்தலைவர், தூத்துகுடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.!

பொருளாளர் மக்களவைக்கு ழத்தலைவர்டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர். அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். !

இவ்விழாவில் பங்கேற்க, தொண்டர்களுக்கு கட்சியின் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.!
இதனால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அமரும் வகையில், பிரம்மாண்ட அரங்கம் உருவாக் கப்பட்டு வருகிறது.!
இந்நிலையில் தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அண்ணா பிறந்தநாள் குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், '75 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் நம் பேரறிஞர் அண்ணா!
தலைவர் கலைஞர் தன் இறுதி மூச்சிலும் “அண்ணா… அண்ணா…” என்றே பேசினார்; எழுதினார்.
அத்தகைய உணர்வுப்பூர்வமான தம்பிமார்களைப் பெற்ற ஒப்பற்ற பெருமகன்! ஒரு இனத்தின் அரசாகச் செயல்பட நம்மை ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன்!' என்று தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
Comentarios