தி.மு.கழக முப்பெரும் விழா ! ஆக்கப்பூர்வ கருத்து ! உற்சாக படுத்திய முதல்வர் தளபதியார்! அமைச்சர் கே.என்.நேரு சமூக வலைதள பதிவு !
- உறியடி செய்திகள்
- Sep 9, 2024
- 1 min read

தோகமலை.
ச ராஜா மரியதிரவியம் ......
.
தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதியார், காணொலி காட்சி மூலம் கழகமுப்பெரும் விழா குறித்த ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கூறி மிகவும் உற்சாகப்படுத்தினார். என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
இது குறித்து தி.மு.கழக முதன்மைச் செயலாளர், அமைச்சர் கே.என்.நேரு சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது..

தி.மு.கழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழுவின் பணிகளை ஆய்வு செய்யும் விதமாக, தி.மு.கழகத் தலைவர் - தமிழ்நாடு முதல் அமைச்சர் தளபதி யாருடன் காணொளிக் காட்சி வாயிலாக நடத்தியக் கூட்டத்தில் நேற்று பங்கேற்றோம்.

சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இதுவரை கழகத்தின் 11 சார்பு அணிகளின் நிர்வாகிகளை சந்தித்து, அவர்களின் பணிகளை ஆய்வு செய்தது தொடர்பான விவரங்களையும் - அடுத்து திட்டமிடப்பட்டுள்ள ஆலோசனைக் கூட்டங்கள் பற்றியும் கழகத் தலைவர் அவர்களிடம் எடுத்துக்கூறினோம். !

2026 சட்டமன்றத் தேர்தலிலும் கழகத்தினை வெற்றி பெறச் செய்திட, தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகள் பற்றி நம் தலைவர் அவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.!

மேலும், கழகத்தின் ‘பவள விழா’ ஆண்டினை மக்கள் போற்றும் வகையில் கொண்டாடிடவும் - கழகத்தின் ‘முப்பெரும் விழா’ சிறக்கவும் ஆக்கப்பூர்வமானக் கருத்துக்களை எடுத்துரைத்து உற்சாகப்படுத்தினார்கள்.!
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பதிவிட்டுள்ளார்..
留言