திராவிடம் - கத்தோலிக்கம் மறந்த ஒரு பாவபட்ட இனத்தின் கதை! தன் வாழ்வையே அர்ப்பணித்த துறவியின் வீர வரலாறு!
- உறியடி செய்திகள்
- Apr 17
- 5 min read

ச.ராஜா மரியதிரவியம் .....
தோகமலை - மணப்பாறை.
எழுத்தாளர் யா . அருள் கட்டுரை கருவிலிருந்து செய்தியாக !
திராவிடமும்- கத்தோலிக்கமும் மறந்த! அடிமைபடுத்தப்படும் ஒரு இனத்தின் கதை!
தன் வாழ்நாளை அர்ப்பணித்த துறவியின் வீர வரலாறு.!
சமூக நீதி - சமத்துவம் எங்கே ? நாடு செல்கிறது ?
ஒரு அருட்தந்தை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இவர் சிறந்த உதாரணம். பாதருக்கு 1படித்தோம் , வெள்ளை அங்கி போட்டோம் , திருப்பலி வைத்தோம் , மகிழ்ச்சியாக வாழ்ந்தோம் என்றில்லாமல் தாம் படித்த துறவற படிப்பு இயேசு கிறிஸ்து போல மக்கள் பணி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சேரிக்கும் , ஊருக்கும் ஒதுக்கப்பட்ட மக்களான புதிரை வண்ணார் மக்களுக்கு சேவை செய்தவர் திராவிட அரசுகளின் செயல்பாடுகளுக்கு முன் உதாரணமானவர்.!
சலேசியன் திருச்சபையில் இருந்துகொண்டு உரிமைக்குரலை எழுப்பிய கலகக்காரர் அருட்தந்தை அருள்வளவன். படித்தது துறவற படிப்பு என்றாலும் செய்த பணி எல்லாம் போராட்டம் , ஆர்ப்பாட்டம் , அரசுக்கு மனு கொடுத்தல் , வீடு கட்டி கொடுத்தல் , பட்டா வாங்கல் , புதிரை வண்ணார் மக்களின் குழந்தைகளுக்கு கல்வி வழங்கல் , அந்த மக்களை ஒருங்கிணைப்பு செய்தல் இப்படி இவரின் மக்கள் பணியை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதனை அறிந்த காரணத்தாலோ என்னவோ முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் முதல்வர் பணிகாலத்தில் இம்மக்களின் விடுதலைக்கான முதல் அடியாக, நல வாரியம் அமைத்தார். அதன் தலைவர், நிர்வாகம் உறுப்பினர்கள் என்பது நடைமுறைக்கு சாத்தியமாக்க வில்லை காரணம், எந்த சாதீய கொடுமை சாதீய இந்து தாழ்த்தப்பட்ட மக்களிடம் தங்களையும் வாழ்தாரத்தையும் காத்து கொள்ள கிருத்துவ மதம்மாறியவர்களின் நிலை மட்டும் இன்றும் அப்படியே தான் உள்ளது. இதனை இன்றைய தமிழக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் முதல் எம்.பி.எம்.எல்.ஏக்கள் வரை கண்டு கொண்டதும் கரிசனம் கொண்டதும் இல்லை. அதே சமயம் இன்று ஒவ்வொரு எம்.எல்.ஏ.எம்.பி. தொகுதிகளின் வெற்றி - தோல்விகளை தீர்மானிக்கும் தீக்குச்சியாக உருவெடுத்து வாழ்ந்து வருகின்றார்கள் என்பது எத்தனை மாவட்ட, கோட்ட, வட்ட அரசு நிர்வாகங்களுக்கு தெரியும்!

இந்நிலையில்தான் இவர்களின் வாழ்வாதரநிலைகளை உள்வாங்கியவராக"துரும்பர் விடுதலை இயக்கம்" என்ற ஒரு அமைப்பை கட்டமைத்து அதில் மாநில ஒருங்கிணைப்பாளராக கடந்த சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் எந்த அருட்தந்தையும் செய்யத் துணியாத பணியை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் துணிச்சலாக செய்த போராளி இவர். திருச்சபையில் அவ்வப்போது உரிமைக்குரல் எழுப்பியவர். சபையில் ஏழை , எளிய மக்களை கொண்டுபோய் வயிறார உணவு போட்டு , தங்க வைத்து , அவர்களுக்கு எல்லா உதவிகளும் செய்து , அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியைக்கான பாடுபட்டவர்.!
'என் பணி சேவை செய்து கிடப்பது' என்ற சொல்லுக்கு சொந்தக்காரர். ஆடம்பரம் , சொத்து , அதிகாரம் , பதவி இவை அனைத்தையும் குப்பையில் போட்டுவிட்டு எளிமை , நேர்மை , உண்மை என வாழ்ந்த பாதர் இவர். எத்தனையோ புதிரை வண்ணார் மக்களுக்கு அரசின் மூலம் வீடுகள் கட்டிக் கொடுத்தவர். துரும்பர் விடுதலை இயக்கம் அலுவலகத்தை செஞ்சியில் உருவாக்கி , பல தோழர்களிடம் நிதி பெற்று, கட்டிடத்தை கட்டி , அங்கு வருவோர் போவோருக்கு அடைக்கலம் கொடுத்தவர். !

சாப்பிட்ட இலையை எடுத்து அதில் கிடைக்கும் மீதி கஞ்சியை வைத்து தன் பசி போக்கும் புதிரை வண்ணார் மக்களை எவர் கண்டு கொள்கிறார்கள்? அப்படி சமூக புறந்தள்ளப்பட்ட அந்த மக்கள் பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டும் , அடிப்படை உரிமைகளை பெற வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த மாமனிதர். இரண்டு முறை இதய அறுவை சிகிச்சை செய்த போதும் தன் உடல்நிலை குறித்து துளியும் கவலைப்படாமல் மக்கள் பணி செய்தவர். இனி புதிரை வண்ணார் மக்களை குறித்து கவலைப்படும் ஒரு பாதரை பார்க்க முடியுமா??

வெறும் புதிரை வண்ணார் மக்களுக்கு மட்டுமல்ல பட்டியலின , பழங்குடியின , அமைப்புச்சாரா தொழிலாளர்கள் பக்கம் நின்று குரல் கொடுத்தவர். கிறித்தவ புதிரை வண்ணார் ஒருவர் இறந்து போகிறார். அவரை புதைக்க கல்லறையில் இடம் கொடுக்கவில்லை. உடலை வைத்துக்கொண்டு புதைக்க இடம் கொடுக்கும் வரை ஆதிக்க சாதியின மக்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினார். ஒரு கட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையே இவரை கூப்பிட்டு பேச்சுவார்த்தை நடத்துகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தில் பின் வாங்க மாட்டேன் என கோபத்தில் பேசுகிறார். இது தொடர்பாக மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்சை சந்தித்து திருச்சபையில் நடக்கும் சாதிய தீண்டாமைகள் குறித்து புகார் தெரிவிக்கிறார்.

சிறுபான்மையினர் நல ஆணைய தலைவரும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதி கடும் நடவடிக்கை எடுக்க சொல்லுகிறார். அந்த கடிதத்தின் நகல் வாங்க எத்தனை முறை எனக்கு போன் அடித்திருக்கிறார். அதை எல்லாம் மறக்க முடியுமா ? அந்த கடிதத்தை வைத்துக்கொண்டு அவர் நடத்திய உரிமை போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. (இதே நிலைதான் கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டத்திலும் பல ஊர்களிலும் இன்றும் நடக்கிறது என்பது தனி கதை) இவரின் உரிமை போராட்டங்களுக்கு கத்தோலிக்க திருச்சபையும் துணை நிற்கவில்லை என்பது தான் கத்தோலிக்கத்தில் இம்மக்களுக்கு தமிழ்நாடு முழுவதுமே சமநிலை வழங்கவில்லை கிடைக்கவும் இல்லை என்பதற்கு மிகப்பெரிய உதாரணமாகிறதுஎன்பதும் பெரிய அச்சத்திற்குறிய செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்பது தான் அறம். அதைத்தான் புரட்சியாளர் இயேசு கிறிஸ்தும் , புனிதர் தொன் போஸ்கோவும் செய்தார்கள். ஆனால் இன்று வரை இம்மக்கள் சம்மந்தபட்ட விசயங்களிலும் தமிழக அரசோ, அதன் அனைத்து துறைகளோ கவனித்தாக வரலாறு இல்லை.! மாறக லோக்கல் ஆளும்கட்சி முதல் - மார்க்ஸியம் பேசும் அனைத்து அரசிகளின், குறிப்பாக (சாதி இந்துக்களால் இவர்கள் படும் துன்பங்கள் இன்றும் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது)தற்போது மறைந்த போராளி அருள் வளவன் அவர்களும் செய்தார். ஆனால் திருச்சபை அவரின் உரிமை போராட்டங்களுக்கு ஏன் உடன் நிற்கவில்லை என்பது தெரியவில்லை ? எல்லாத்துக்கும் இந்த இடத்தில் தான் கத்தோலிக்கத்திலும், அரசியலிலும் சாதி முதற் காரணமாக இருக்கிறது. ஆனால் சாதி ஒழிப்புக்கும் , சமத்துவத்திற்கும் தொடர்ந்து குரல் கொடுத்தவர் பாதர் அருள் வளவன்.

அவர் ஏறி இறங்காத அரசு அலுவலகங்கள் இல்லை. சந்திக்காத அரசியல் கட்சி தலைவர்கள் இல்லை. கோரிக்கை மனு கொடுக்காத நாட்கள் இல்லை. திருச்சபையில் உட்கார்ந்து கொண்டு , வெள்ளை அங்கியை போட்டுக்கொண்டு திருப்பலி வைக்க வேண்டிய ஒரு பாதர் ஒரு இன விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, தன் உயிரை அந்த மக்களுக்காக விட்டு இருக்கிறார் என்றால் இவர் போற்றப்பட வேண்டிய மனிதர். இன்றைய காலக்கட்டத்தில் எந்த அருட்தந்தை இப்படி மக்கள் பணி செய்கிறார்கள். மனசாட்சிக்கும், இறைவனுக்கும் பயந்து வேண்டுமானால் மறுப்பு இருந்தால் விளக்கட்டும்.!
இயேசு சபையில் ஒரு ஸ்டேன்சாமி , சலேசியன் சபையில் ஒரு அருள்வளவன். !
சாவதற்கு முன் தினம் புதிரைவண்ணார் மக்களுக்கு கள்ளக்குறிச்சியில் வீடு கட்ட அலைந்து திரிந்திருக்கிறார். அதில் அவரின் உடலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அரசு அதிகாரிகள் சரி என்று சொல்லி இருக்கிறார்கள். அடுத்த நாள் அனைவருக்கும் இடம் அளந்து வீடு கட்டும் திட்டம் ஆரம்பிக்க உள்ளது. ஆனால் அவர் உயிரோடு இல்லை. துணை ஆட்சியர் மாலையோடு உடல் இருந்த செஞ்சி அலுவலகம் வந்த போது அவர் சொன்ன வரிகள் கண்ணீரை கசிய வைத்தது. எல்லாருக்கும் வீடு வாங்கி கொடுத்து விட்டு அதைப்பார்க்க நீங்க இல்லையே சார் என்றார்.

ஆக இம்மக்கள் வாழ்வதற்கும் வழியில்லை - மடிந்த பின்பு அடக்கம் செய்யக்கூட இடம் இல்லை.! இதற்கு கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டம், வட்டம் உதாரணம் இதே நிலைபோலத்தான் தமிழக முழுவதும் இன்றும் உள்ளது. இந்த இடத்தில் தான் இம்மக்கள் திராவிடத்தால் வாழ்ந்தார்களாக, கத்தோலிக்கமும் சமநிலை கொடுத்து கவனித்ததா? என்கிற கேள்வி இயற்கையாகவே எழுகிறது.!
அஞ்சலி செலுத்த தோழர்களுடன் சென்ற போது புதிரை வண்ணார் பெண்கள் பலர் "கடவுள் எங்களுக்காக அனுப்பி வைத்தவர்தான் இந்த பாதர்". அடிமையாக வாழ்ந்த எங்களை உரிமைக்காக போராட வைத்தவர். அவரை கடவுள் எடுத்துக் கொண்டது கஷ்டமாக இருக்கு என கண்ணீர் விட்டு அழுத போது வாழ்ந்தால் இவரை போன்று ஒவ்வொரு பாதரும் வாழனும் என சிந்திக்க தோன்றியது. இனியாவது இது நடக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்விகளை நமக்குள் எழுப்ப த்தான் செய்கிறது.!
திருச்சபையில் நிலவும் சாதிய ஏற்றுத்தாழ்வுகளுக்கு எதிராக எமது இயக்கம் அவர் விடுத்த கோரிக்கை படி இத்தாலியில் உள்ள Fr. Fabio Baggio SDB, is the head of the Salesians of Don Bosco (SDB),
அவர்களுக்கு இந்த பிரச்சினையை இன்று வரை கொண்டு செல்லப்பட்டதா?
திருச்சபையில் இவரைப்போன்று மக்கள் பணி செய்யும் அருட்தந்தையர்கள் மிகக்குறைவு. அருள்வளவன் போன்ற போராளிகளை கத்தோலிக்க திருச்சபை அடையாளம் கண்டு உரிய அங்கீகாரம் செய்து அவரின் பணியை இன்னும் ஊக்குவிப்பு செய்திருக்க வேண்டும். ஆனால் திருச்சபை கடைசி காலத்தில்வரை செஞ்சியில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பவுஞ்சூர் எனும் இடத்தில் உள்ள ஒரு ஆலயத்திற்கு உதவி பங்குத்தந்தையாக நியமித்தது தான் மிகவும் மன ரீதியில் அவருக்கு பெரும் பாதிப்பை உருவாக்கியது. மக்கள் பணி செய்யும் இவரைப்போன்ற அருட்தந்தையர்களை அங்கீகாரம் செய்ய வேண்டிய பொறுப்பு கத்தோலிக்க திருச்சபைகளுக்கு உண்டு. ஆனால் திருச்சபை அதை செய்யாத காரணம் என்ன??

தன் வாழ்வை துரும்பர் இன மக்களுக்கு அர்ப்பணித்த மக்கள் போராளி பாதர் அருள்வளவன் விட்டுச்சென்ற பணிகளை அவரைப்போன்று உள்ள ஒரு பாதரை வைத்து தொடர்ந்து பணி செய்ய சலேசியன் சபை முன் வர வேண்டும். இத்தனை காலம் கஷ்டப்பட்டு உருவாக்கிய துரும்பர் விடுதலை இயக்கம் அமைப்பை தொடர்ந்து நடத்த வேண்டும். அதற்கு சபை பக்க பலமாக இருக்க வேண்டும். அவரின் மக்கள் பணியை அங்கீகாரம் செய்யும் விதமாக தமிழக அரசு அவர் பெயரில் ஒரு அரங்கம் அமைத்து தந்து புதிரை வண்ணார் மக்களை பயன்பெற செய்ய வேண்டும். இவை எல்லாம் செய்தால் தான் திருச் சபைக்குத்தான் பெருமை.
சாதி இந்துக்களுக்கும் , பட்டியலின மக்களுக்கும் துணி துவைத்து கொடுக்கும் சாதி புதிரை வண்ணார். இந்த புதிரை வண்ணார் மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்து , சங்கமாக்கி , அமைப்பாக மாற்றி போராட வைத்த பெருமை இவரைச் சேரும். கிறிஸ்தவ புதிரை வண்ணார் மக்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்க அரசிடம் வழிவகை செய்தார். புதிரை வண்ணார் நல வாரியம் அமைக்க பல ஆண்டுகள் போராடினார். அரசு இவரின் கோரிக்கைக்கு செவிமடுத்து வாரியம் அமைத்தது.
அவரோடு மக்கள் களத்தில் பயணித்த நாட்கள் ஒவ்வொன்றும் மறக்க முடியாதவை. அவர் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து நானும் , எனது இயக்கமும் செய்யும். மக்கள் களத்தில் நின்ற உண்மையான போராளி மறைவு துரும்பர் இன மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பு ஆகும். அவரை இழந்துவாடும் , துரும்பர் விடுதலை இயக்க தோழர்கள் , குடும்பத்தார்கள் , நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வோம்.!

நீங்கள் மறைந்தாலும் , நீங்கள் செய்த சேவைகள் என்றும் மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கும். போய் வாருங்கள் அன்பு பாதரே ! எங்கள் அருமை தோழரே ! மக்கள் களத்தில் நின்று இறுதிவரை புதிரை வண்ணார் மக்களின் உரிமைகளுக்காக போராடி மறைந்த அன்புத் தோழர் அருள்வளவன் அவர்களுக்கு வீர வணக்கங்கள் ✊✊
அண்ணல் அம்பேத்கார் தனது நூல் ஒன்றில் இம் மக்கள் பற்றி, பகலில் நடமாட முடியாத இனம் என்று குறிப்பிட்டிருந்தார்.!
அதே சமயம் ஊருக்கு ஒரு குடியாக வாழ தொடங்கிய இவர்கள். இன்று இவர் கள் வாக்கு சதவிகிதத்திலும் தனித்துவம் பெற்றுள்ளார்கள் என்பது நிதர்சனம்.!
இவ்வளவு சித்தரவதைகளுக்கு குள்ளாகியுள்ள இம் மக்கள் ஒட்டுமொத்த ஓட்டுக்களும், 2026. தேர்தலில் எப்படி - எத்தகைய கோப - தாபங்களுடன் வெளிப்படும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!
கட்டுரையாளர்.
திரு.யா. அருள் ,
எழுத்தாளர் , செய்தி தொடர் பாளர் ,
அமைப்புச்சாரா தொழிலாளர் கூட்டமைப்பு ,
தேசிய அமைப்பாளர் , மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு ( NAPM )
ஒத்த கருத்துடன்.!
ச.ராஜா மரிய திரவியம்.
மூத்த பத்திரிக்கையாளர்.
மேனாள் : ஒருங்கிணைந்த தமிழக ஆயர் பேரவையின் SC -ST கமிஷன்.
ஒருங்கிணைப்பாளர்.
மதம்மாறிய பழங்குடியின கிறித்துவ மக்கள் நல அமைப்பு.
Comentários