பாஜக, மீதோ பயம் பயம்! பழனிசாமிக்கு என்னதான் ஆசை? பொதுக்குழு தீர்மான பிதட்டல்கள்! அமைச்சர் கே.என்.நேரு சாடல்!
- உறியடி செய்திகள்
- Dec 17, 2024
- 2 min read

ச.ராஜா மரியதிரவியம்.
தோகமலை ...
“பழனிசாமியின் நீளும்பயப் பட்டியல் !. பாஜக மீதான பாசமும் அதிகம். எனவேதான், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தி.மு.கழக அரசுக்கு எதிரான தீர்மானங்களுக்கு ’கண்டனம்’ என்றும், ஒன்றியமோடி அரசுக்கு எதிரான தீர்மானங்களில் ’வலியுறுத்தல்’ என்றும் சொல்லி தங்களின், பயங்கலந்த,பாஜக மீதான பாசத்தை வெட்ட வெளிச்ச மாக்கியிருக்கிறார்.”
தி.மு.கழக முதன்மை செயலாளர், மூத்த அமைச்சர் கே.என்.நேரு. சாடல்!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.,
பா.ஜ.க,வுடன்
கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக அதனை , தங்களின் அரசியல் லாபத்திற்காக அடிக்கடி, தொடர்ந்து ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
தற்போதைய அதிமுக, வின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் கூட, மக்கள் நலனில் உண்மையாகவும் முழுமையாகவும் செயல்பட்டு வரும் தி.மு.கழக அரசுக்கு எதிராக, தங்களின்அரசியல் லாபத்திற்காக , நிறைவேற்றபட் என்றதீர்மானங்களில் ’கண்டனம்’ எனவும், ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக நிறைவேற்றபட்ட தீர்மானங்களில் ’வலியுறுத்தல்’ என்றும் குறிப்பிட்டு தங்களின் பாஜக,வுடனான கள்ள உறவை பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் பழனிசாமி.

பழனிசாமி - அவரின் சகாக்களுக்கு மோடி என்றாலே ரைடு பயமா? அமித்ஷா என்றாலே , அமலாக்கத் துறை பயமா?, சிபிஐ பயமா?, வருமானவரித் துறை பயமா?, அல்லது தமிழ்நாட்டில் ஆளுநர் மீதுபயமா? என்கிற கேள்வி எழுகிறது. ரெய்டு பயம், சின்னம் பறிபோய்விடுமோ என்று பயத்துடன், பழனிசாமி - சகாக்களின் பயத்தின் பட்டியலும் பயத்துடனே ” சீனப் பெருஞ்சுவற்றை போலவே முடிவேயில்லாமல் நீண்டு கொண்டே வருகிகிறது.
தாங்கள் அரசியல் செய்ய வேண்டும், மக்களையும் - மக்களின் மனதையும் மடை மாற்றம் செய்ய வேண்டும், தங்களின் சுய நல அரசியலை நடத்தும் பழனிசாமியின் வகையறாக்கள், மக்களின் மீது, கலாச்சாரம், பண்பாடு, மீது உண்மையிலே அக்கரையுடன் செயல்படுபவர்கள் என்றால்,
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்த மசோதா தி.மு.கழகம் உள்ளிட்ட எதிர்கட்சியி னரால் மாநிலங்களவையில் தோல்வி அடைய செய்திருக்கலாம்.
நாடாளுமன்றத்தில் சுரங்கம் மற்றும் கனிமத் திருத்த மசோதாவிற்கு அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை ஆதரவளித்து, அன்றுடங்ஸ்டன் சுரங்கத்திற்கு மறைமுகமாக ஆதரவளித்தால் தான் இன்று போராட வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

ஜெயலலிதா எதிர்த்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டத்துக்கெல்லாம் மோடிக்குப் பயந்து ஆதரவு. முத்தலாக் தடை சட்டத்திற்கு மக்களவையில் ஆதரவு மாநிலங்களவையில் எதிர்ப்பு என பழனிசாமியும் - சகாக்களும் அதிமுகவும் இரட்டை வேடம் போட்டதுதான் இன்று மக்களை மிகப்பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாக்கி யுள்ளது. நம் தொப்புள்கொடி உறவான சிறுபான்மை மக்களான முஸ்லிம் மதத்தவர்களை அவதூறாகப் பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமாரை பணிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை 2024-இல் மாநிலங்களவையில் கொண்டு வர ஆதரித்துக் கையெழுத்திட மறுத்தது ஏன்? என்கிற கேள்வி மக்கள் மறந்து விட்டார்கள் என்கிற எண்ணமா?.நாடு விடுதலை அடைந்த நாளில் இருந்த வழிபாட்டுத் தலங்களை வேறு மதங்களுக்கு மாற்ற முடியாது என்கிற மத வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991-க்கு எதிராக பாஜக நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில், பல மிக்க அதிமுக அப்போதுகருத்து தெரிவிக்காமல் பதுங்கியது ஏன்? என்று தான் புரியவில்லை.!

தன்னை ஒரு விவசாயி’ என்று மார்தட்டி கொண்டும், சொல்லிக் கொண்டும் மோடி அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை பலமாக ஆதரித்தது மட்டுமின்றி அவற்றை எதிர்த்தவர்களையும் கடுமையாக விமர்சித்த விஷவாயு தான் அதிமுகவும், பழனிசாமி அன்கோவும். என்பதையும் மக்கள் மறந்து விடவில்லை. இப்படியாக ஒட்டுமொத்தமாக மக்களுக்கும் - நாட்டிற்கும் எதிராக மாநிலங்களின் சுயாட்சிக்கு எதிரான ஒரு நாடு ஒரு தேர்தல் மசோதாவையும் ஆதரிக்கும் பாஜகவின் உன்னத தோழன் தான் பழனிசாமி சகாக்கவும் அதிமுக.வும் என்பதை மறைத்து விட்டு தங்களின் அரசியல் நாடகத்தை நடத்துகின்றனர்

இப்படி மோடி அரசின் மக்கள் விரோத சட்டங்களையும் திட்டங்களையும் ரெய்டுக்கு பயந்து ஆதரித்த கோழைதான் பழனிசாமி. இவர்தான் அதிமுக பொதுக்குழுவில் வீராவேசமாகப் பேசுவது போல், காற்றோடு கத்தி, கூச்சலிட்டு திடீர் பாசம் கொண்டவராக சண்டையிட்டு வருகின்றார். பெட்ரோல் விலை உயர்வு, காஸ் விலை உயர்வு என என்றைக்காவது கண்டித்து அதிமுகவும் பழனிசாமியும் அறிக்கை விட்டிருக்கிறாரா ர்களா?

அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும். 2026-ல் அதிமுக மீண்டும் அரியணை ஏறும்” என்றெல்லாம் பொதுக்குழுவில் ஆக்ரோஷமாகப் பேசியிருக்கிறார். இவரின் செயல்பாடுகள் கோழையாக செயல்பட்டு வரும் இத்தையவர்களுக்கு என்ன தான் ஆசையோ? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.”
இவ்வாறாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
Comments