திருச்சியில் தியாகிஇமானு வேல் சேகரன் பிறந்த நாள் ! அமைச்சர் கே.என்.நேரு மலர் தூவி மரியாதை - புகழாராம் !
- உறியடி செய்திகள்
- Oct 9, 2024
- 1 min read

தோகமலை.
ச. ராஜா மரியதிரவியம் ......
திருச்சியில் தியாகி இமானுவேல் சேகரன் பிறந்தநாள், அமைச்சர் .கே.என்.நேரு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை. ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குராலாய் ஒலித்தவர் என்று புகழாராம்.
தி.மு.கழகத் தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார்.!
இந்நிலையில் தியாகி இமானுவேல் சேகரனின் நூறாவது பிறந்தநாள் விழா இன்று (அக்.9) முதல் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.!

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள தி.மு.கழக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவ படத்துக்கு தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.!

தி.மு.கழக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர், திருச்சி மேயர் மு. அன்பழகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், மாநில மாணவரணி துணைச் செயலாளர் பி.எம்.ஆனந்த், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் துரைராஜ், மாமன்ற உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் உடன் இருந்தனர்.!

தி.மு.கழக முதன்மை செயலாளர். தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தனது சமூக வளைதள பக்கத்தில்,
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக ஒலித்த தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி, தில்லைநகரில் உள்ள எனது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.! இந்நாளில் சமூக நீதி சமத்துவம், மென்மேலும் ஓங்கச்செய்வோம்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பதிவிட்டுள்ளார்.
Comments