top of page
Search

பருவ மழை புயல் எதிரொலி ! தமிழகம் முழுவதும் அதிகாரிகளிடம் காணொலி மூலம் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆய்வு !

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Oct 16, 2024
  • 1 min read

தோகமலை.

ச. ராஜா மரியதிரவியம் ------


சென்னை கட்டுப்பாட்டு அறையில் காணொலி காட்சி மூலம் கண்காணித்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி அறிவுறுத்தல்கள் ஆலோசனைகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கி, முன்னேற்பாடுப்பணிகளையும் முடுக்கிவிட்டார்.


தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் நாளை (17.10.2024) அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் வானிலை ஆய்வு மையம் சார்பில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது.!


இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த நான்கு மாவட்டங்களில் ஒரு இடங்களில் மிக கன மழை பெய்யக்கூடும் எனவே இங்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது என வானிலை மையம் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.!

முன்னதாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வரக்கூடிய நிலையில் தற்போது சென்னைக்கு 190 கிலோ மீட்டர் கிழக்கு - தென் கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெல்லுருக்கு தென்கிழக்கில் 270 கிலோமீட்டர் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு 200 கிலோமீட்டர் கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது நகரும் வேகம் 17 கிலோமீட்டர் ஆக சற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.!

இந்நிலையில் தி.மு. கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அறிவுறுத்தலின்படி சென்னையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேர அவசர கால கட்டுப்பாட்டு அறையில் வடகிழக்கு பருவமழை முன் ஏற்பாடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவைப்படும் படகுகளை அனுப்புவது குறித்தும் ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழக மீன்வளம் - மீனவர் நலன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ஆர். அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.!

கூட்டத்தில் மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட முன் ஏற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர் முன்னெச்சரிக்கைப்பணிகளை துரிதபடுத்தியும் - பணிகளில் ஈடுபட்டுள்ளோர்களையும், அதிகாரிகளையும் முடுக்கிவிட்டு அறிவுறுத்தல்களை வழங்கினார்.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page