நெல்லை : முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா ! கபடி போட்டி தொடங்கி வைத்தார் கனிமொழி கருணாநிதி ! சுவாரசிய பேச்சு !
- உறியடி செய்திகள்
- Sep 9, 2024
- 1 min read

தோகமலை.
ச.ராஜா மரியதிரவியம்....
நெல்லையில் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் இந்தியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எம்.பி., கனிமொழி கருணாநிதி சுவாரசிய பதில் !
தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தலா 30 ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்ட மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. முன்னதாக போட்டியை தி.மு.கழக துணைப்பொதுச் செயலாளர்., தூத்துக்குடி மக்களவை உறுப்பினர்,, கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார்.!
தொடர்ந்து போட்டியில் பங்குபெற உள்ள அனைத்து வீரர்கள், வீராங்கனைகளுக்கு கனிமொழி கருணாநிதி வாழ்த்துக்களை கூறினார். !

அப்போது கூட்டத்தின் ஒரு பகுதியில் இருந்த வீராங்கனை ஒருவர் இந்தியில் கேள்வி ஒன்றை அவரிடம் கேட்டுள்ளார். மொத்தக்கூட்டமும் அவர் என்ன சொல்ல போகிறார், எப்படி எதிர்கொள்ள போகிறார் என்று ஆவலடன் காத்திருந்தது.
இதில் சற்றும் சலைக்காமல் கனிமொழி கருணாநிதி
இந்தி கேள்வியை எதிர்கொண்டவுடன் இந்தி தெரியாது என்பதை மட்டும் குறிப்பிடாமல் தெளிவான ஆங்கிலத்தில் அளித்த பதில் தான் கூடியிருந்தவர்கள்மத்தியில் சுவாரசியமாக அமைந்தது.

அப்போது கேள்விக்கு பதில் கூறியகனிமொழி கருணாநிதி கூறியதாவது;
மன்னிக்கவும், நீங்கள் கேட்பது எனக்கு புரியவில்லை. உங்களின் பிரச்னை என்னவென்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. டில்லியில் நான் இருந்த போது ஏற்பட்ட அதே நிலைமை தான் உங்களுக்கும்.

என்னால் இந்தியை புரிந்து கொள்ள முடியவில்லை. உங்களுக்கு ஆங்கிலம் புரிந்து கொள்ள முடியும். நம் இருவருக்கும் ஆங்கிலம் தெரியும் என்று குறிப்பாக பேசி அனைவரையும் கலகலப்பாக்கினார். !
மேடையில் தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாற்றிய அவர், அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துகளையும் கூறினார்.
Comments