தி.மு.க.தலைவரை தேட வேண்டிய அவசியமில்லை ! யாரும் அசைக்க முடியாது ! அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு !
- உறியடி செய்திகள்
- Sep 19, 2024
- 1 min read

தோகமலை.
சராஜா மரியதிரவியம் ........
தி.மு.க வுக்கு நாங்கள் தலைவரை தேட வேண்டிய அவசிமில்லை. அடுத்த 25 ஆண்டுகளுக்கு தி.மு.கழகத்தை யாரும் அசைக்க முடியாது”:! கழகத்தை வழிநடத்த உதயநிதி தயாராக உள்ளார். என் அப்பா, நான். எனது மகன் இருக்கும் கட்சி தி.மு.க. ! குடும்ப கட்சி என்றால் பெருமை தான் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு.

விருதுநகரை அடுத்த ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பில் தி.மு.கழக பொது உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (செப்.19) நடைபெற்றது. இதில் மாவட்ட தி.மு.கழகச்செயலாளர் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் கூறியதாவது:

“தி.மு.கழத்திலிருந்து எம்ஜிஆர், வைகோ போன்றவர்கள் வெளியே சென்றாலும் சேதாரம் இல்லாமல் 75 ஆண்டு காலமாக கட்சி கட்டமைப்புடன் உள்ளது. எனது அப்பாவின் கட்சி திமுகழகம், என்னுடைய கட்சி திமுக, எனது மகனின் கட்சி தி.மு.கழகம், எங்கள் குடும்பத்தில் அனைவருமே தி.மு.கழகத்தை சேர்ந்தவர்கள்தான். அதனால் இது குடும்ப கட்சிதான். தி.மு.கழகத்தை குடும்பக் கட்சி என்று சொல்வதில் எனக்குப் பெருமை தான்.!

மக்களவைத் தேர்தலில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கழகத்தலைவர், முதல்வர் தளபதியார் கூறியபோது கூட்டணி கட்சியினரே சந்தேகப்பட்டனர். ஆனால், வெற்றி பெற்றோம்.!
அது போல தற்போது, வருகிற 2026,ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும் என்று கழகத்தலைவர் முதல்வர் நம் தளபதி கூறியிருக்கிறார்.!

மகளீர் உரிமைத்தொகை இன்னமும் கிடைக்கவில்லை என்று கூறினார்கள்.
விடுபட்ட அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கச் செய்துவிட்டு தான், சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓட்டுக் கேட்க வருவோம்.!
பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரும், அவருக்குப் பிறகு நம் கழகத்தலைவர் தளபதி யாரும் தி.மு.கழகத்தை வழி நடத்துகின்றனர்.!

தலைவர் கலைஞரை விட கூடுதலான வெற்றியை தளபதியார் பெற்றுத் தந்துள்ளார். அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக உதயநிதி இருக்கிறார். கழகத்தலைவர் தளபதியை விட அதிகமாக உதயநிதி உழைத்துக் கொண்டிருக்கிறார். தி.மு.கழகத்தை வழிநடத்த அடுத்த தலைவராக உதயநிதி தயாராக இருக்கிறார்.!
நாங்கள் தலைவரை தேட வேண்டியதில்லை. அடுத்த 25 ஆண்டுகளுக்கு தி.மு.கழகத்தை யாரும் அசைக்க முடியாது”:!
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
.
Comments