போன ஜென்ம பாவம் ! மாற்றத்திறனாளிகள் விமர்சனம் சர்ச்சை பேச்சு ! மகா விஷ்ணு விமான நிலையத்தில் கைது !
- உறியடி செய்திகள்
- Sep 7, 2024
- 1 min read

சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு என்கிற பெயரில் மூட நம்பிக்கையை ஊக்கப்படுத்தும் வகையில் பேசி, மாற்றுத்திறானாளி ஆசிரியரை தரைக்குறைவாகவும் பேசிய குற்றசாட்டுக்கு ஆளான மகாவிஷ்ணு, சென்னை விமானத்திலேயே முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் கைது செய்யபட்டு, விசாரணைக்குட்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாற்றுத் திறனாளிகளை இழிவாக பேசியதாக பரம்பொருள் பவுண்டேஷன் நிறுவனர் மகாவிஷ்ணு மீது திருவெற்றியூர் காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகாரை மாற்றுதிறனாளி அமைப்பினர் அளித்தனர்.!..
சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளி, சைதாப்பேட்டை மாந்தோப்பு மாடல் பள்ளிகளில் தன்னம்பிக்கை விழிப்புணர்வு என்ற பெயரில் பேசவந்த பரம்பொருள் பவுண்டேஷன் நிறுவனர் மகாவிஷ்ணு மூடநம்பிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும், மாற்றுதிறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இது தொடர்பாக சமுக வலைதளங்களிலும், சமுக ஆர்வளர்களும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து அவர்மீது சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் மாற்றுதிறனாளிகள் அமைப்பினர் புகார் அளித்திருந்தனர். அதேபோல குமர்நகர் காவல்நிலையத்திலும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக சம்பந்தபட்ட காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் சென்னை திருவெற்றியோரை சேர்ந்த சரவணன் என்பவர் மாற்றுத் திறனாளிகளை இழிவாக பேசியதாக பேச்சாளர் மகாவிஷ்ணு மீது புகார் அளித்துள்ளார். அவர்மீது தொடர்ந்து புகார்கள் குவிந்து வருவதால் காவல்துறை உயர் அதிகாரிகள் அலோசனை நடத்தினார்கள்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த மகாவிஷ்ணுவிடம், சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீஸார் தீவிர முதல் கட்ட விசாரணை நடத்தினர். சைதாப்பேட்டை உதவி ஆணையர் ஸ்ரீனிவாசன் தலைமையிலான போலீசார் மகாவிஷ்ணுவிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் தொடர்ந்து மகாவிஷ்ணுவை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர். விமான நிலையத்திலிருந்து மகாவிஷ்ணுவை அழைத்துச் சென்ற போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை தெற்கு இணை ஆணையர் சி.பி.சக்கரவர்த்தி, அடையாறு துணை ஆணையர் பொன் கார்த்திக் சுமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு தரப்பினர் அளித்த புகார்கள் தொடர்பாகவும் மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
コメント