top of page
Search

மூத்தஅமைச்சர் கே.என்.நேரு தகவல்! திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய காவல் நிலையம்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jan 21
  • 1 min read

ச. ராஜா மரியதிரவியம்.

தோகமலை ..


திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புதிய காவல்நிலையம் கட்டுவதற்கான பணிகளை தமிழக மூத்த அமைச்சர் தி.மு.கழக முதன்மைச்செயலாளர் அமைச்சா் கே.என்.நேரு, அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.


இதுகுறித்து தி.மு.கழக முதன்மைச் செயலார், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை, மூத்த அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்த திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 1979-ஆம் ஆண்டு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.


2021-ஆம் ஆண்டு தரம் உயா்த்தப்பட்டு அரசு மருத்துவமனை காவல்நிலையம் என்ற பெயரிலேயே இயங்கி வருகிறது. புறக்காவல் நிலைய கட்டடமானது, போதிய இட வசதியில்லாமல் உள்ளது. மேலும், கட்டமும் பழுதாகி ஆங்காங்கே சேதம் ஏற்பட்டுள்ளது.


எனவே, காவல்நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் இருந்து வந்தது. இதுதொடா்பாக, காவல்துறை, மருத்துவமனை நிா்வாகம், மாவட்ட நிா்வாகம் தரப்பில் தமிழக முதல்வர், தளபதியாரின் தலைமையிலான கழகஅரசின் கவனத்துக்கு கொண்டு வந்ததைத் தொடா்ந்து மருத்துவமனை வளாகத்திலேயே புதிய கட்டடம் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதிய காவல்நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் இப்போது நடைபெற்றுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு, கூறினார். முன்னதாக இந்த விழாவில் பங்கேற்று அடிக்கல் நட்டு வைத்து கட்டுமானப் பணிகளையும் தொடங்கி வைத்தாா்.


மேலும் இந்த புதிய காவல்நிலையமானது ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. தரைத்தளத்துடன் 8 அறைகளுடன் கூடிய கட்டடமாக கட்டப்படுகிறது. 1,520 சதுர அடி பரப்பில் நுழைவு வாயில், வரவேற்பு அறை, காவல் ஆய்வாளா் அறை, காவல்நிலைய நிா்வாக அறை, விசாரணைக் கைதிகள் வைத்திருப்பதற்கான 2 பிரத்யேக அறைகள், வாகன நிறுத்துமிடம், கழிப்பறை, குடிநீா் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் நவீன காவல்நிலையத்துக்கு தகுந்தபடி கட்டமைக்கப்படுகிறது.

அடிக்கல்நாட்டு விழாவில், ஆட்சியா் மா.பிரதீப்குமாா், மாநகரக் காவல் ஆணையா் என்.காமினி, மாநகராட்சி ஆணையா் வே.சரவணன், காவல் துணை ஆணையா் ஈஸ்வரன், மாநகராட்சி மேயா் மு.அன்பழகன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.குமரவேல், மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளா் உதய அருணா மற்றும் அரசு மருத்துவர்கள், காவல் துறையினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

 
 
 

Comentarios


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page