மிசாவையே பார்த்த இயக்கம் தி.மு.க.! கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்வதில் முதல்வர் முன்மாதிரியாக செயல்படுகிறார்.! அமைச்சர் ரகுபதி பேட்டி !+
- உறியடி செய்திகள்
- Sep 13, 2024
- 1 min read

தோகமலை.
ச.ராஜா மரியதிரவியம் ......
மிசாவையே பார்த்த இயக்கம். தி.மு.கழகத்தை எவராலும் ஒரு போதும் மிரட்ட முடியாது. கூட்டணி கட்சித் தலைவர்களை அரவணைத்து செல்வதில் முன்மாதிரியாக திகழுபவர் தான் கழகத் தலைவர், முதல்வர் தளபதியார்.எங்களிடம் இதை வைத்து யாரும்அரசியல் செய்ய வேண்டாம்.எல்.முருகனுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி.
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது.

சிறைக் கைதிகளை விடுவிப்பதில் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது.
இதுவே நம்முடைய கருத்தாகவும் எடுத்துக்கொள்ளலாம். தி.மு.கழகத்தை திருமாவளவன் மிரட்டுவதாக உண்மைக்கு மாறாக எல்.முருகன் கூறி வருகிறார். எங்களுடைய நண்பர்கள் யாரும் எங்களை மிரட்ட மாட்டார்கள்.

தி.மு.கழகத்தை எந்த கட்சியும் மிரட்ட முடியாது. மிசா காலத்திலேயே நாங்கள் பயப்படாதவர்கள்.தி.மு.கழகம் ஒருபோதும் எந்த மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் பயப்படக்கூடிய கட்சி அல்ல. எங்களை நம்பி வந்தவர்களை நாங்கள் மோசம் செய்ய மாட்டோம். அவர்களுக்கு உண்மையான நண்பராக இருப்பவர் தான் கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதியார். !
.

தோழமை கட்சிகளுக்கான, மதிப்பையும் மரியாதையை இந்தியாவிலேயே எந்த கட்சியும் கொடுக்காத வகையில், முக்கியத்துவம் கொடுத்து மதிப்பளித்து வருபவர் எங்களுடைய முதலமைச்சர் தளபதி. இதனை கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.
அதனால் திருமாவளவன் எங்களை மிரட்ட மாட்டார்.! எனவே இதனை யாரும் அரசியலாக்க வேண்டாம்.
காரணமில்லாமல், சட்டத்திற்கு புறம்பாக யாரையும் நாங்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்வது கிடையாது.ஓரிரு இடங்களில் தவறு நடந்திருப்பதை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருந்தால் அந்த தவறை நாங்கள் திருத்திக் கொள்ள தயாராக உள்ளோம். !

மாற்றுதிறனாளிகளை அவதூராக, பள்ளியில் மூடரும்பிக்கையை வளர்க்கும் வகையில் பேசிய விவகாரத்தில் மகா விஷ்ணு அறக்கட்டளை க்கு வெளிநாடுகளிருந்து பணம் அவருக்கு வந்துள்ளதாக தகவல் தெரிந்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். !
பண பரிவர்த்தனை விவகாரம் குறித்து அமலாக்கத்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.
Comments