விழா கோலத்தில் திருச்சி! 2 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை! அமைச்சர் கே. என்.நேரு அறிக்கை!
- உறியடி செய்திகள்
- May 7
- 2 min read

ச. ராஜா மரியதிரவியம்.
தோகமலை. ( மணப்பாறை)
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தி.மு. கழக தலைவர் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நாளை வருகை! விழா கோலத்தில் திருச்சிஅமைச்சர் கே. என்.நேரு அறிக்கை.!
திமுகழக தலைவர் தமிழ்நாடு முதல் அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நாளை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் கி.மு.கழக முதன்மை செயலாளர் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மாநகர தி.மு.கழக செயலாளர் மு. அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
தொடர்ந்து காலை 11 மணிக்கு துவாக்குடி ஜி.பி.டி. வளாகத்தில் நடைபெறும் விழாவில் ரூ.69 கோடி மதிப்பீட்டில் ஹைடெக் ஆய்வகம் , ஸ்மார்ட் வகுப்பறைகள் தங்கும் விடுதி ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அரசு மாதிரிபள்ளியை முதலமைச்சர் மு. க ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனை தொடர்ந்து டிவிஸ் டோல்கேட் அரசு விருந்தினர் மாளிகையில் அரசு அலுவலகர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.!




மாலை தொடர்ந்து 5 மணிக்கு தலைமை தபால் நிலையம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தில்லைநகர் வழியாக சாலை மார்க்கமாக புறப்பட்டு செல்லும் திமுகழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறும ஒன்றுபட்ட மாவட்ட தி.மு.கழக செயல்வீரர்கள் - நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசணைகள் வழங்கிக சிறப்புரை ஆற்றுகிறார். அதன் பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் முதலமைச்சர் நாளை மறுநாள் காலை 9 மணிக்கு மன்னார்புரம் நால்ரோடு சந்திப்பில் கிராப்பட்டி, எடமலைப்பட்டி புதூர் வழியாக பஞ்சப்பூர் செல்கிறார்.



அங்கே தந்தை பெரியார் உருவ சிலையை திறந்து வைத்து ரூ.236 கோடி மதிப்பீட்டில் தந்தை பெரியார் ஒருங்கினைந்த காய்கறி அங்காடி கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதே பகுதியில் ரூ.129 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கணரக சரக்கு வாகன முனையத்தையும் , போறிஞர் அண்ணா உருவ சிலையும் திறந்து வைக்கிறார். தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் உருவச்சிலையை திறந்து வைத்து அங்கு ரூ.403 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து பேருந்து நிலைய வளாகத்தை பார்வையிடும் முதல் - அமைச்சர் முதல் தளத்தில் நகர பேருந்துகளின் இயக்கத்தை கொடி அசைத்து திறந்து வைக்கிறார். தொடர்ந்து நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் சுமார் 50,000 த்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு பட்டாக்கள் வழங்கி ரூ.463 கோடியில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் ரூ.277 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி ரூ.830 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாவில் சிறப்புரை ஆற்றுகிறார். இதனை தொடர்ந்து தனியார் பொறியியல் கல்லூரியில் நிகழும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் அமைச்சர் அன்று (வெள்ளிக்கிழமை) இரவு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். !
தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாடு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதையொட்டி அவரை வரவேற்க கட்சியினர் மாநகர முழுவதும் கட்சி கொடிகளையும் வரவேற்பு தோரணங்களையும் கட்டி வருகின்றனர் இதனால் திருச்சி மாநகரம் முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு கருதி நாளை - நாளை மறுநாள் நள்ளிரவு 12 மணிவரை இரண்டு நாட்கள் டிரோன்கள் - ஆள் இல்லா வான்வெளி ஊர்திகள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.!
இது குறித்து
தி.மு.கழக முதன்மைச்செயலாளர் - தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், கே.என்.நேரு அறிக்கை ஒன்றில், தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் இரண்டுநாள் சுற்றுப்பயணமாக தீரர் கோட்டமாம் திருச்சிக்கு இன்று வருகை தருவதை யெட்டி, முதல் அமைச்சர் தளபதியருக்கு நாளை காலை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிப்பதுடன் - முதல் அமைச்சர் தளபதியார் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் - இந்நாள் மக்கள் பிரதிநிதிகள், கழக அனைத்து சார்பு அணியினர்கள் - கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர் செயல்வீரர்கள் அலைகடலென அணிதிரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Kommentare