உத்தரகண்ட் நிலச்சரிவு ! மீட்கபட்ட தமிழர்கள் ! முதல்வர் - அரசுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி !
- உறியடி செய்திகள்
- Sep 15, 2024
- 1 min read

உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரவு.! மீட்க பட்ட தமிழர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் - அரசுக்கு நன்றி !
கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து 18 ஆண்கள், 12 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் உத்தராகண்ட் மாநிலம், ஆதிகைலாஷ் கோயிலுக்கு கடந்த 1-ம் தேதி சுற்றுலா புறப்பட்டுச் சென்றனர். சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் வீடு திரும்ப இருந்த போது வழியில் ஆதி கைலாஷிலிருந்து 18 கி.மீ தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டது.!

அவர்கள் அனைவரும் அங்குள்ள ஒரு ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதுகுறித்த விவரம் தெரிந்தபின் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.!
தொடர்ந்து தி.மு.கழகத் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரகாண்ட்டில் சிக்கித் தவித்த தமிழர்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார். அனைவரையும் பத்திரமாக மீட்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.!
இதனை தொடர்ந்து அவர்களை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.!

தமிழக அரசு உத்ரகாண்ட் அரசுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில் 30 பேரும் மீட்கப்பட்டனர்.!
மீட்கப்பட்ட தமிழர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் தமிழகம் திரும்ப உள்ளனர். பாதுகாப்பாக மீட்கப்பட்ட அனைவரும் தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
Kommentare