யாருக்கு பதவி, தலைவருக்கு தெரியும் ! துணை முதல்வரானார் உதயநிதிஸ்டாலின் ! கனிமொழி கருணாநிதி, எம்.பி. வாழ்த்து !
- உறியடி செய்திகள்
- Sep 29, 2024
- 1 min read

தோகமலை.
ச ராஜா மரியதிரவியம்....
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராக பொறுப்பெற்க உள்ளார். !
அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்தி.மு.கழக. எம்.பி கனிமொழி கருணாநிதி, இது குறித்து தனது கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.!

தமிழக அரசியலில், கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய தி.மு.கவில், முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வான தி.மு.கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்று, கடந்த 2022-ம் ஆண்டு அமைச்சராக பொறுப்பேற்ற நிலையி்ல், தற்போது 2024-ம் ஆண்டு துணை முதல்ராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் சார்பில், நேற்று (செப்டம்பர் 28) அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஆளுனருக்கு கடிதம் கொடுக்கப்பட்டது.!

இது குறித்து ஆளுனர் மாளிகை வெளியிட்டிருந்த அறிவிப்பில், உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர். அரசு கொறடா கோ.வி.செழியன், உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்து. அதேபோல் கட்சி மற்றும் ஆட்சியில்,உதயநிதியின் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்தும் வகையில் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தி.மு.கழக வட்டாரத்தில் கூறப்பட்ட நிலையில், சென்னை ராஜ்பவனில் பதவியேற்பு விழாவும் இன்று நடைபெற்றது.!

இது குறித்து , தி.மு.கழக துணைப்பொதுச் செயலாளர், நாடாளுமன்ற இரு அவைகளின் குழுத்தலைவர், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர், கவிஞர் கனிமொழி கருணாநிதி கூறுகையில், துணை முதலமைச்சராக யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் யார் பொறுப்பேற்க வேண்டும் என்பது முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் எடுக்க வேண்டிய முடிவு. அந்த வகையில் இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த வாய்ப்பை, பொறுப்பை வழங்கி இருக்கிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிகச்சிறப்பாக செயல்பட வேண்டும்.அவருக்கு என்னுடைய வாழ்த்துகள் இவ்வாறு கனிமொழி கருணாநிதி கூறியுள்ளார்.!

மேலும் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கும் போது, கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நான் அறிவுரை கூற வேண்டிய அவசியம் இல்லை. யாருக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதை முதல்வர் தளபதி ஸ்டாலின் முடிவு செய்ததான் பதவியை கொடுத்துள்ளார். அதனால் யாருக்கும் அறிவுரை சொல்ல வேண்டிய தேவை இல்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கே தெரியும். அதனால் வாழ்த்துக்களை மட்டுமே தெரிவித்துக் கொள்கிறேன். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மட்டுமல்லாமல், புதிதாக பொறுப்பேற்க உள்ள அமைச்சர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.!
இதனிடையே துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ள, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.கழக துணைப்பொதுச் செயலாளர். கனிமொழி கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.!
Comentarios