அடைமழையா - செடி மழையா! அதிமுக, எம்.டி.யோ பழனிசாமி! ஹெச்.ராஜா கேள்வி?
- உறியடி செய்திகள்
- Sep 2, 2024
- 1 min read

தோகமலை.
ச.ராஜா மரியதிரவியம் ......
அ.தி.மு.க.,விற்கு சேர்மன் நிர்வாக இயக்குனரா பழனிசாமி !, தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா கேள்வி!
உயர் கல்வி படிப்பதற்காக செல்கிறேன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, லண்டன் சென்றுள்ளார். நவம்பர் மாதம் வரை அங்கு கல்வியை தொடரவுள்ளதாகவும் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகின்றது..
இந்நிலையில், தமிழகத்தில், பா.ஜ., தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு, ஆறு பேர் கொண்ட குழுவை, அக்கட்சி தேசிய தலைவர் நட்டா நியமித்தார்.
அதன் ஒருங்கிணைப்பாளராக ஹெச்.ராஜா நியமிக்கப்பட்டு உள்ளார்.!
ஆளுநர் ரவியை நேற்று, ஹெச்.ராஜா சந்தித்து, ஒன்றரை மணி நேரம் பேசினார்.!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா கூறுகையில் .
மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்தேன். வாழ்த்து பெற்றேன். குறிப்பிடும்படி ஒன்றுமில்லை. கட்சி விதிகளின் படி 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அகில இந்திய தலைவர் முதல் அனைவரும் கட்சி உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க வேண்டும். அதன்படி இன்று தொடங்கி 45 நாட்கள், அக்டோபர் 15 வரை இந்த பணிகள் நடைபெறும்.ஒரு பூத்துக்கு 400 பேரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று டெல்லி தலைமை அறிவுறுத்தியுள்ளது!
. அதன் அடிப்படையில், தமிழகத்தில் 1 கோடி பேரை சேர்ப்பதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி தன்னுடைய உறுப்பினர் சேர்க்கையை புதுப்பிக்கிறார். அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு சென்னை கமலாலயத்தில் மாநில நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் உறுப்பினர் சேர்க்கையை புதுப்பிக்க உள்ளனர்.!
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார் என்றும் கூறினார்கள். அது தற்போது நடக்கிறது. ஆண்டவனே அதை நடத்தி காட்டியுள்ளார்.!
கார் பந்தயம் விளையாட நினைப்பவர்கள் விளையாடுகின்றனர். அதில், பங்கேற்பவர்களுக்கு என் வாழ்த்துகள்.!

நடப்பாண்டு மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில்வே பணிகளுக்கு 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.!
கடந்த 10 ஆண்டுகளில், 10.6 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது.
ஆனால், 2004 முதல் 2014 வரையிலான காங்., ஆட்சியில் குறைந்த நிதிதான் வழங்கப்பட்டது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.!
நொண்டி குதிரைக்கு சறுக்கினது சாக்கு என்பர்கள். ஊழலையும், கையாளாகாத தனத்தையும் மூடி மறைக்க, மத்திய அரசு மீது குறை கூறுகின்றனர்.!
பா.ஜ., கார்ப்பரேட் வடிவில் நிர்வாகிகளை நியமித்துள்ளதாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார். அப்படியானால், அ.தி.மு.க.,விற்கு சேர்மன் ஆகவும், நிர்வாக இயக்குனராகவும் பழனிசாமி செயல்படுகிறாரா என்பதையும் அவர் தான் விளக்க வேண்டும்.!
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தான் அட மழை விட்டாலும் செடி மழை விடாது என்றார்களோ?
Comments